மேலும் அறிய

”அம்மாவுக்கு இந்த நோய்.. பணமும் இல்ல..” : தகன மையத்துக்கு தாயின் சடலத்தை, வீல்சேரில் கொண்டுவந்த மகன்.. திருச்சியில் பரிதாபம்

வறுமையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முருகானந்தம் அக்கம்பக்கத்தினர் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் தாயின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கவே அவரை மகன் முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்துள்ளார். இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் (சோரியாசிஸ்) அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில், அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் வைத்து தாயை கவனித்து வந்த முருகானந்தம் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

”அம்மாவுக்கு இந்த நோய்.. பணமும் இல்ல..” : தகன மையத்துக்கு தாயின் சடலத்தை, வீல்சேரில் கொண்டுவந்த மகன்.. திருச்சியில் பரிதாபம்

தாயை கவனிப்பதற்காக பெரும்பாலான நாட்கள் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வறுமை அவரை வாட்டியது. இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி இன்று அதிகாலை இறந்து விட்டார். வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முருகானந்தம், தனது தாயின் நோயை சொன்னாலும் உதவ யாரும் வரமாட்டார்கள் என நினைத்ததால், அக்கம் பக்கத்தினர்  யாரிடமும் ஏதும் சொல்லாமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார்.

மேலும் அதற்காக தன் தாயின் உடலை ஒரு வீல் சேரில் அமர்ந்திருப்பது போல் வைத்து உடலை சுற்றி துணியால் கட்டினார். பின்னர் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் உள்ள மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு எடுத்து சென்றார். பொழுது விடிவதற்குள் உடலை எடுத்துச்சென்ற முருகானந்தம் தகனம் செய்திட எரிவாயு தகன மேடை பராமரிப்பாளரான ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்தார்.  இதற்கிடையே சுடுகாட்டின் அருகே உள்ளவர்கள் பார்த்தபோது இறந்த மூதாட்டியின் உடல் வீல் சேரில் எடுத்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சுடுகாட்டிற்கு வந்த பராமரிப்பாளர் பார்த்து அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இது போன்று வீல் சேரில் உடலை கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார். அப்போது தெரியாமல் இதுபோன்று செய்துவிட்டேன் என்று கூறினார். பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக்கொண்டு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தார்.

அறியாமை மற்றும் வறுமையால் நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களின் உள்ளங்களையும் உருக்குலைய செய்திருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது.. இதுபோன்ற நிகழ்வு யாருக்கும் ஏற்படக்கூடாது என கண்ணீர் விட்டு தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Embed widget