திருச்சி : விமான நிலையத்தில் இரண்டு மாதத்துக்கு பின்பு அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை..
திருச்சி விமான நிலையித்தில் ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருச்சி விமான நிலையித்தில் ஜூன் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன்படி இரண்டு மாதங்களுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமாக பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக விமான பயணிகள் பலர் தங்களது பயணங்களை ரத்து செய்து விட்டனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த பயணிகளுடன் விமான சேவை நடக்கிறது.
குறிப்பாக தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலம், நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து விமான மூலம் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், விமானநிலையத்தில் மிகவும் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்த போது தமிழகத்தில் இருந்து மற்ற நாடுகள், மாநிலங்களுக்கு விமானம் சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் பயணம் செய்ய வரும் பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும், பரிசோதனை முடிவில் நகலை கையில் வைத்திருக்க வேண்டும், அவற்றை சோதனை செய்த பிறகே அவர்களுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். மீண்டும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளதால், விமானம் மூலம் பயணம் செய்யும் பணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும், இல்லையென்றால் பயணம் செய்ய அனுமதி இல்லை என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, துபாய், ஐதராபாத், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 12 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக மட்டுமே இருந்தது. கொரோனா 2 அலை ஊரடங்கிற்கு முன்பாக ஜனவரி மாதம் 46,204 பேர், பிப்ரவரி மாதம் 41,224 பேர், மார்ச் மாதம் 47,877 பேர், ஏப்ரல் மாதம் 35,728 பேர் திருச்சி விமான நிலையம் வழியாக பயணங்களை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. இதனால் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதன்படி கடந்த மே மாதம் 15,088 பேரும், ஜூன் மாதம் 17,606 பேர் மட்டுமே திருச்சி விமான நிலையம் வழியாக பயணங்கள் மேற்கொண்டு இருந்தனர். ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதன்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 28,989 பேர் திருச்சி விமான நிலையம் வழியாக பயணம் செய்துள்ளனர். எனவே இந்த மாதம் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.