டெல்டா மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள் சில..
திருச்சி மாவட்டத்தில் இன்று 36 இடங்களில் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது, பொது மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும், மாவட்ட ஆட்சியர் சிவராசு வலியுறுத்தல்.
1- திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொண்ட அப்போது ஓடுதளம் வான் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
2- திருச்சி அருகே உள்ள முக்கொம்பு மேலணை காவேரி ஆற்றை இரண்டாக பிரித்து தண்ணீரை பாசனத்திற்காக காவிரி ஆற்றில், வெள்ள நீரை கொள்ளிடம் வழியாகவும் வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறந்த கட்டுமானம் ஆகும். இதில் புதிதாக கட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3- திருச்சி மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க ஆட்டோ டிரைவருடன் ஆலோசனை கூட்டம் 28 இடங்களில் நடந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள் அரசு விதிமுறைப்படி தெளிவாக நம்பர் பிளேட் போன்றவை அமைத்திருக்க வேண்டும். அதே போன்று சந்தேகப்படும்படியாக யாரும் குற்றச சம்பவங்கள் குறித்து தொலைபேசியில் பேசி கொண்டு வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் அறிவுரை வழங்கினர்.
4- திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் ,அதே போன்று அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இன்று 36 இடங்களில் தடுப்பூசி முகாமை அமைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
5- புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் .ரவி, முருகானந்தம் பழனிவேல் , மற்றும் காந்திமதி , ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
6- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் மற்றும் 4 மாணவிகளுக்கு கொரோனோ உறுதியாகியுள்ளது. இதனால் பள்ளி முழுவதும் கிருமிநாசினி சுத்தம் செய்யப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7- இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளை தவிர்த்து திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் பொது மக்களிடமிருந்து நேரடியாக மக்களை பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
8- நாகை மாவட்டத்தில் படகு மூலம் இலங்கைக்கு கஞ்ச கடத்த முயன்ற வழக்கில் 4 பேர் வீடுகளில் சுங்கத்துறை குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
9- நாகை மாவட்டத்தில் தனிமையில் இருந்தபோது இடையூறு செய்ததால் ஆத்திரமடைந்த பாசக்கார தாய் மகனை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, கள்ளக்காதலன் குண்டர் சட்டத்தில் கைது.
10- தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
11- பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 7 மாணவிகள், ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐந்து நாட்களுக்கு பள்ளியை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.