சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் கலாச்சாரங்களின் சங்கமம் ஆகும் - மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான்
தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த விதம் மற்றும் நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்புகள் பற்றிய சொல்லப்படாத வரலாறுகளை விவரிப்பதன் மூலம் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டும்.
திருச்சி பழைய பால் பண்ணையில் உள்ள தனியார் ஹோட்டலில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் சாலை கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தேவுசின் சவுகான், குஜராத் மாநில அரசு நிதி மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை அமைச்சர் ஸ்ரீ கனுபாய் தேசாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் திருச்சி நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட "சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்" சாலை கண்காட்சியில் உள்ளூர்வாசிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். காசி சங்கமம் போன்று குஜராத் மாநிலம் மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி சௌராஷ்டிராவிற்கும். தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள கலாச்சார உறவைக் கண்டறியவும், உறுதிப் படுத்தவும் மற்றும் கொண்டாடவும் உதவியாக இருக்கும். மேலும் இன்று திருச்சி நகரில் நடந்த சாலைக் கண்காட்சியின் போது, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி -முதல் தொடங்கவிருக்கும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் 15 நாள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கபட்டது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம், 3,000 பங்கேற்பாளர்களுக்கு சௌராஷ்ட்ரிய தமிழர்களின் வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சௌராஷ்டிரர்களின் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றை காணும் வாய்ப்பை பெறுவார்கள். ஒரு சமூகம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த விதம் மற்றும் நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்புகள் பற்றிய சொல்லப்படாத வரலாறுகளை விவரிப்பதன் மூலம் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய, மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், “திருச்சி ஒரு கல்வி பிரபலமானது மற்றும் கலாச்சார சூழலையும் கொண்டுள்ளது. புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமனின் பூமி இது சௌராஷ்டிரா மொழியானது 55,000 சௌராஷ்டிர தமிழர் சமூகத்தால் பேசப்படுகிறது. இந்த சமூகம் திருச்சி மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் காணப்படும் கலாச்சார நடைமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் குஜராத்தில் காணப்படும் சௌராஷ்ட்ரிய நடைமுறைகளையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் கலாச்சாரங்களின் சங்கமம் ஆகும். மத்திய மோடி அரசாங்கமும், குஜராத் மாநில அரசாங்கமும் இணைந்து ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒருமுறை மீண்டும் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும் சிறந்த முயற்சியாகும். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சௌராஷ்டிரியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பளிக்கும்” என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, குஜராத் மாநில அரசின் நிதி, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை அமைச்சர் ஸ்ரீ கனுபாய் தேசாய், “தமிழ்நாட்டில் உள்ள சௌராஷ்டிரா சமூகம் தனித்துவமான ஒரு வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்ட வேண்டியது அவசியமாகும். இந்த கலாச்சார நிகழ்ச்சி தமிழ்நாடு மற்றும் குஜராத் என இரண்டு மாநிலங்களுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ள சௌராஷ்டிரியர்களின் பங்களிப்புகளை கவுரவித்து அவர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும்" எனத் தெரிவித்தார். இத்திட்டம் கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேயின் ஆதரவைப் பெற்றுள்ளது. தஞ்சாவூர், சௌராஷ்டிரா மற்றும் ஜூனாகத் போன்ற இரு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும் பார்வையாளர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்குவதில் பங்களித்துள்ளன கலை, சிற்பம். உணவு, பாரம்பரியம், வணிகம், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிராவிற்கு இடையே உள்ள எண்ணற்ற தொடர்புகளை இத்திட்டம் எடுத்துக் காட்டும். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜவுளி மற்றும் கைத்தறிகளை காட்சிப் படுத்துவதற்கான கண்காட்சிகள், கைவினைஞர்களின் கூட்டங்கள். வணிக நிகழ்வுகள் விவாதங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை திட்ட அட்டவணையின் ஒரு பகுதியாகும்.
ஒரே குடும்பம், ஒரே பூமி, ஒரே எதிர்காலம் என்று பொருள்படும் ஒற்றுமையை வசுதைவ குடும்பம் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடையாளம் காட்டியுள்ளார். உலகெங்கிலும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முடிவெடுக்கும் இலக்குகளை ஊக்குவித்து வருகிறது. குஜராத் மாநில அரசு சென்னை மற்றும் மதுரையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சாலைக் காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. கூடுதலாக திருச்சி, திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி போன்ற நகரங்களில் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாச்சார உறவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தொடர் சாலைக்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.