மேலும் அறிய

அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 வது முறையாக கையெழுத்திட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற முன் ஜாமீனை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஐந்தாவது முறையாக இன்று காலை  கையெழுத்திட்டார். இவ்வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் உடன் கைதான அதிமுக சேர்ந்த நிர்வாகிகள் சென்னையை சேர்ந்த இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும், திருச்சியில் தங்கியிருந்து இரண்டு வாரங்கள் திங்கள், புதன், வெள்ளி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்தது அடுத்து இன்று இவர்கள் இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தது, தமிழகத்தில் திமுக  அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் . தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை, ஆனால்  தேவையற்ற பல திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களுக்கு சொன்னதை நிறைவேற்றுங்கள்.

அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பொருத்த வரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவில்லை. டி.ஆர்.பாலு கூறுகிறார் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று, கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார். கட்சி ரீதியாக ஜிஎஸ்டிக்குள்  கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது என குற்றம்சாட்டினார். கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள் என்றார். மேலும்  ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு, ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது. இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் கொடுத்து விசாரணை செய்வார்கள். இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை. திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களை விட்டால் அந்தமானுக்கு தள்ளி பேட்டி எடுக்க சொல்வார்கள் என தெரிவித்தார்.

அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, ஏற்கனவே கட்சி எடுத்த ஒரே முடிவு தான். நேற்று, இன்று, நாளை கட்சி எடுத்த முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என பதிலளித்தார். முன்னதாக ஜெயக்குமார் கையெழுத்திட கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குள் வந்தபோது அவருடன் வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வாயிலில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து.? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!எந்த எந்த மாவட்டங்களுக்கு ரிஸ்க்- வெதர்மேன் அலர்ட்
தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து.? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! எந்த எந்த மாவட்டங்களுக்கு ரிஸ்க்- வெதர்மேன் அலர்ட்
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget