திருச்சியில் ரூ.280 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மார்ச்சில் முடியும் - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
திருச்சி உட்கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சாலை பணிகள் அனைத்தும் மார்ச் மாதம் முடிவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
திருச்சி உட்கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் மாநில நெடுஞ்சாலை 11.76 கி.மீ. நீளத்திற்கு 90.06 கோடி மதிப்பிலும், இதர சாலைகள் 12.80 கி.மீ. நீளத்திற்கு 44.90 கோடி மதிப்பிலும், மாவட்ட இதர சாலைகள் 15.80கி.மீ. நீளத்திற்கு 18.77 கோடியிலும், சாலை ஓடுதளத்தை அகலப்படுத்துதல், வடிகாடில் கட்டுதல், சாலை மேம்பாடு செய்தல், தரைமட்ட தாம் போக்கிகளை சிறு பாலங்களாக திரும்ப கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. லால்குடி உட் கோட்ட அளவில் 12.60 கி.மீ. நீளத்திற்கு 10.82 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை திட்டத்தில் 13.20 கி.மீ. நீளத்திற்கு 8.92 கோடியிலும், மாவட்ட இதர சாலை 24.40 கி..மீ நீளத்திற்கு 27.38 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் முசிறி உட்கோட்ட பகுதிக்குட்பட்ட மாவட்ட முக்கிய சாலை 7.கீ.மீ நீளத்திற்கு 12.75 கோடியிலும், மாவட்ட இதர சாலைகள் 37.20 கி.மீ. நீளத்திற்கு 20.02 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. துறையூர் உட்கோட்ட அளவில் 0.525 கி.மீ. நீளத்திற்கு 2.37 கோடியிலும், மாவட்ட முக்கிய சாலை 9.40 கி,மீ நீளத்திற்கு 12.46 கோடியிலும், மாவட்ட இதர சாலை 11.00 கி.மீ. நீளத்திற்கு 10.61 கோடியிலும், கரும்பு அபிவிருத்தி சாலை 5.00 கி.மீ நீளத்திற்கு 3.26 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மணப்பாறை உட்கோட்ட அளவில் மாவட்ட முக்கிய சாலை 8 கி.மீ நீளத்திற்கு 3.47 கோடியிலும், மாவட்ட இர சாலை 21.20 கி.மீ. நீளத்திற்கு 14.21 கோடியிலும் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட மாநில தேசிய நெடுஞ்சாலையின் உட்கோட்ட பிரிவுகளில் மொத்தம் 190 கி.மீ. தூரத்திற்கான சாலை மேம்பாடு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு என்று ரூ.280 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், திருச்சி மாவட்டத்தில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்டப் பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறும் போது.. இரவும், பகலுமாக நடைபெற்றுவரும் இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்