மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு - 4 பேர் மீது வழக்கு

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரடி, பன்னீர்செல்வத்தின் நிலத்தை அபகரிப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார்.

திருச்சி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி வரகனேரி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). இரும்பு வியாபாரியான இவருக்கு சொந்தமான 52 சென்ட் காலி இடம் திருவெறும்பூர் அருகே எல்லக்குடி கிராமத்தில் உள்ளது. 14.06.1985 அன்று அந்த நிலத்தை ஒருவரிடம் இருந்து பன்னீர்செல்வம் வாங்கி, தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருந்தார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், பன்னீர்செல்வம் எல்லக்குடிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பன்னீர்செல்வத்தின் நிலத்தை சுற்றி புதிதாக வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உடனே அவர், இதுபற்றி அவர்களிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது, அந்த நிலம் திருச்சி பெரியகம்மாள தெருவை சேர்ந்த பிரடி (56) என்பவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் திருவெறும்பூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, பன்னீர்செல்வம் பெயரில் போலி ஆதார் ஆவணங்களை தயாரித்து, ஒருவரை பன்னீர் செல்வம்போல் ஆள்மாறாட்டம் செய்ய வைத்து, நிலப்பத்திரம் தொலைந்து விட்டதாக கூறி அதே நிலத்தை தனது பெயருக்கு பிரடி 18-7-2022 அன்று பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. அத்துடன், பிரடி தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்தபோது திருச்சி அரியமங்கலம் இலந்தைபட்டி மோதிலால் தெருவை சேர்ந்த பிரகாஷ் (42), மலையப்பநகர் காமராஜர் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி (51) ஆகியோர் சாட்சி கையொப்பம் போட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு - 4 பேர் மீது வழக்கு

மேலும் அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மிக நேர்த்தியாக இந்த மோசடியில் பிரடி செயல்பட்டது அம்பலமானது. அதாவது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரடி, பன்னீர்செல்வத்தின் நிலத்தை அபகரிப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக பன்னீர்செல்வத்தின் ஆதார் கார்டு போல், மற்றொரு நபருக்கு அதே பெயரில் போலி ஆதார் கார்டு ஒன்றை பிரடி தயாரித்துள்ளார். அதன் பின்னர் அந்த நிலத்தின் சர்வே நம்பர் உள்ளிட்ட தகவல்களை புரோக்கர்கள் மூலம் சேகரித்துள்ளார். பின்னர் அவர், அந்த வேறொரு நபரை பன்னீர்செல்வம் போல் ஆள்மாறாட்டம் செய்யவைத்து, தனது அசல் நில பத்திரம் மணப்பாறை மாரியம்மன் கோவில் பகுதியில் தொலைந்து விட்டதாக மணப்பாறை போலீசில் புகார் செய்துள்ளார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து அசல் பத்திரங்கள் கிடைக்கவில்லை என்று சான்று கொடுக்கவே, அதை பயன்படுத்தி, பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் நகல் பத்திரம் வாங்கியுள்ளார். பின்னர், பன்னீர்செல்வம் தனக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுத்ததாக காட்ட, அதே நபரை ஆள் மாறாட்டம் செய்ய வைத்து திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயருக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரடி, பன்னீர்செல்வம் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர், பிரகாஷ், சுப்புலட்சுமி ஆகிய 4 பேர் மீது திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 கோடி நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget