Republic Day : குடியரசு தினவிழாவில் மணக்கோலத்தில் சான்றிதழை பெற்ற அரசு ஊழியர்
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றினார்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74 வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு, வெற்றியினை வானில் பறக்கவிடும் வகையில் வண்ண பலூன்களையும், சமாதானத்திற்காக வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார். அதன் பின்னர் காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்ட அவர், தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார். பின்னை பல்வேறு துறைகளில் கீழ் 31பயனாளிகளுக்கு 32 லட்சத்து 68 ஆயிரத்து 55 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார், மேலும் 311 காவலர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் குடியரசு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் மகிழ்வுடன் கண்டுகளித்தனர்.
74வது குடியரசு தின விழா : திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம்- மணக்கோணத்தில் மனைவியுடன் வந்து சான்றிதழ் பெற்றுக் கொண்ட அரசு ஊழியர்.#RepublicDay2023 #DistrictCollectoratTrichy@TnIpro pic.twitter.com/9CLZ1aRR11
— Dheepan M R (@mrdheepan) January 26, 2023
இந்நிகழ்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Audio Operator ஆக பணியாற்றி வரும் செல்வமணி இன்று காலை 8 மணிக்கு திருமணம் முடிந்த நிலையில் தனது மனைவி செளந்தர்யாவுடன் குடியரசு தின விழா நடைபெறும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு நேரடியாக மணக்கோலத்தில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ சமூகவலயதளங்களில் வைரலாகி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்