மேலும் அறிய

திருச்சிக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பறவைகள்; சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை

திருச்சி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வருகை தந்துள்ளது.

பொதுவாக பறவைகள் உணவு தேடியும் தட்பவெப்ப சூழ்நிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளவும் பல்வேறு நீர் நிலைகளை தேடி ஆண்டுதோறும் வலம் வருகின்றன. பல்லாயிரம் மயில் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று உணவு தேடல் மற்றொன்று தாங்கள் வாழும் இடத்தில் குளிர்காலத்தில் கட்டும் குளிரில் இருந்து தப்பிக்க நீண்ட தொலைவுக்கு நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும், பறவைகளை தான் வெளிநாட்டுப் பறவைகள் என்கிறோம். இவை இனப்பெருக்கத்திற்கு மீண்டும் தங்கள் தாய் நிலம் திரும்புகின்றன. தற்போது திருச்சி மாவட்டம்,  கிளியூருக்கு ஐரோப்பிய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் வழக்கமாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தற்போது திருச்சி கிளியூர், திருவரம்பூர், நேரு மெடிக்கல் காலேஜ்,  அரசங்குடி ஏரி வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற இடங்களில் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வலசை வந்துள்ளன. பறவை ஊசி வால் வாத்து, நீலச்சிறவி வாத்து, ஆண்டி வாத்து, கருவால் மூக்கன், பழுப்புக் கீச்சான்கள், உள்ளிட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன. இதுபோல உள்நாட்டுக்குள் குறைந்த தொலைவு வலசை செல்லும் பறவைகளான கூழைக்கடாக்கள், நத்தைக்கொத்தி நாரைகள், அரிவாள் மூக்கன்கள், மஞ்சள் மூக்கு நாரை, மீசை ஆலாக்கன், தகைவிலான்கள், குள்ளத் தாராக்கள், உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வலசை வந்துள்ளன.

திருச்சிக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பறவைகள்; சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை

தமிழகத்தில் பறவைகள் வலசை வரும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது முக்கியம். மேலும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை நாம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பறவைகள் தங்களது நலனுக்காக வலசை போனாலும், இவற்றால் மகரந்தச் சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தல், விதைகளைப் பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர் பெருக்கம் நிலை பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. எனவே வலசை போகும் பாதைகள் நீர் நிலைகள், தங்குமிடங்கள் ,வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது . தற்போது கிளியூர் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றுவது தொடர்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சிக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பறவைகள்; சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை

மேலும் தமிழ்நாட்டில் பறவைகள் தங்குவதற்கும், இளைப்பாறுவதற்கும் , உணவு உண்ணுவதற்கும் ஏற்ற இடங்கள் பல உள்ளது. அவற்றை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமான நீரால் அந்த குளங்கள், செடிகள் அனைத்தும் அழிந்து வருகிறது . ஆகையால் நாம் இயற்கை வளத்தை பெருக்குவதற்கும், அழிந்து வரும் ஏரிகள், குளங்களையும் பறவைகள் செல்லக்கூடிய நீர் நிலைகளை தூய்மையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget