எக்ஸ்ட்ரா டியூட்டி பார்ப்பாரோ..? ; எங்களை வறுத்தெடுக்கிறார்.. தவிப்பில் புதுக்கோட்டை மக்கள்
மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகம்தானே இருக்கு என்று மக்கள் நொந்து கொள்கின்றனர்.

தஞ்சாவூர்: எக்ஸ்ட்ரா டியூட்டி பார்ப்பாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது என்று புதுக்கோட்டை மக்கள் தவிக்கும் தவிப்பு எதனால் தெரியுங்களா? கடுமையான வெப்பத்தால் புதுக்கோட்டை மக்களை சூரியன் வறுத்தெடுப்பதுதான்.
கோடைகாலம் தொடங்கினாலோ போதும் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு விடும். கொட்டும் மழையை கூட சமாளித்து விடலாம். இந்த கொளுத்தும் வெயிலில் காலம் தள்ள முடியலையே. ஆசுவாசம் ஆகலாம் என்று வீட்டை விட்டு வெளியில் வரலாம்னு பார்த்தலே கிறுகிறுக்குதே என்று புலம்பும் நிலைதான் இப்போது எங்கும் உள்ளது. அந்தளவிற்கு சூரியன் சுட்டெரிக்கிறார்.
மற்ற மாவட்டங்களில் கூட வெயில் அளவு சமமாக இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் வைச்சு செய்கிறார். இந்த வாரம் முழுவதும் வெயில் அளவு எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் பற்றி பார்ப்போம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பமாகி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதாவது அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் பிப்ரவரி மாதம் முதலே தொடங்கி சுட்டெரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெயில் தாக்கம் இருந்து வருகிறது.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் சாதாரண காலநிலைகளிலும் வறட்சியான மாவட்டமாகவே இருந்து வருகிறது. அதாவது வானம் பார்த்த பூமியாக விளங்குகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண அளவை விட தற்போது சற்று அதிகமாகவே வெப்பநிலை அளவு இருந்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக அவ்வப்போது கோடை மழையும் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்து வருகிறது. மழை பெய்தாலும் அடுத்தநாளே சூரியன் எக்ஸ்ட்ரா ட்யூட்டி பார்த்து விடுகிறார்.
ஓடு ஜூஸ் கடைக்கு என்று எனர்ஜியை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி விடுகிறார். அப்படி இருக்கு வெயில். இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அளவு இருக்கும் என்றும் 30 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகம்தானே இருக்கு என்று மக்கள் நொந்து கொள்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகமாக இருக்கிறது. அதுமட்டுமா? கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. இதற்கிடையில் இன்னும் கூடுதல் வெயில் அளவு இருக்கும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.





















