மேலும் அறிய

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து மாணவர்கள் புகார் - தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் அதிரடி

பள்ளி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்காத மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமி சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் கணினி வணிகவியல் பிரிவில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் சீருடையில் நேற்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது நுழைவு வாயில் அருகே ஆட்சியர் கவிதா ராமு காரில் வந்து கொண்டிருந்தார். சீருடையில் மாணவர்கள் செல்வதை கண்ட அவர்  காரை நிறுத்தி மாணவர்களிடம் விசாரித்தார். அப்போது பள்ளியில் தங்கள் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் போதுமானதாக இல்லை, ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்ததாக மாணவர்கள் கூறினர். அவர்களை தனது அலுவலகத்திற்கு தேரில் வருமாறு கூறி சென்று மாணவர்களிடம் மனுவை பெற்றார். மனு அளிக்க வந்த மாணவர்கள் கூறுகையில், எங்களது பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் ஆகிய 6 பாடங்கள் உள்னது. இதில் கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கை ஆகிய 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து மாணவர்கள் புகார் - தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் அதிரடி

இதனால் பாடங்கள் எங்களுக்கு நடத்தப்படவில்லை. வணிகவியல் பாடத்திற்கு மட்டும் 10 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவ்வப்போது வந்து பாடம் நடத்துவதுண்டு, நாங்கள் இந்த பாடங்களை முழுமையாக படிக்கவில்லை. திருப்புதல் தேர்வை தொடர்ந்து விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் நாங்கள் பாடங்களை படிக்க முடியும், எப்படி நாங்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். இதனால் பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நாங்கள் இந்த 3 பாடங்களையும் முழுமையாக படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவோமா? என்பது தெரியவில்லை. எனவே எங்களை தேர்ச்சி பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மாவட்ட ஆட்சியரிடம் தங்களது  கருத்தை மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து மாணவர்கள் புகார் - தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் அதிரடி

இதனை தொடர்ந்து மாணவர்கள்  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் இதே கோரிக்கையை கூறி முறையிட்டனர். பள்ளி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்காத மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமியை (58) பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு உத்தரவிட்டார். அதன்படி அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வுக்கு தயாராக, 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கண்ட பள்ளியில் கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், தணிக்கையியல் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்க அனுமதி வாங்கிய போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கூறியும், அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget