மேலும் அறிய

புதுக்கோட்டை: இறந்தவரின் உடலை நீர்நிலையில் சுமந்து செல்லும் அவலம்; மயான பாதை கோரும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நீர்நிலைகளில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மயான பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பட்டத்திகாடு ஊராட்சியை சேர்ந்த மயிலாடிதெரு கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களது உடலை எடுத்து செல்ல முறையான பாதை வசதி இல்லை. மயானத்திற்கு செல்ல கிரான்குளம் என்ற 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன குளத்தை தாண்டிதான் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லவேண்டும். கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது இந்த குளம் முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி இருந்தபோது அப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை அவரது உறவினர்கள் நீந்தியபடி எடுத்து சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தருவதாக உறுதி அளித்து சென்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 

புதுக்கோட்டை: இறந்தவரின் உடலை நீர்நிலையில் சுமந்து செல்லும் அவலம்; மயான பாதை கோரும் மக்கள்

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் குளத்தில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. இவ்வேளையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிவசாமி என்ற முதியவர் நேற்று இறந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றனர். பெரும் மழை பெய்து குளம் நிரம்பும் முன் மயான பாதை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,  "வானம் பார்த்த பூமியான எங்கள் பகுதியில் மழை பெய்தால் பயப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளோம். 40 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வது வேதனையாக உள்ளது. எனவே உடனடியாக மயான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை: இறந்தவரின் உடலை நீர்நிலையில் சுமந்து செல்லும் அவலம்; மயான பாதை கோரும் மக்கள்

மேலும், ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை  வயல்வெளி மற்றும் நீர் நிலைகளில் எடுத்து செல்லும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக பல முறை போராட்டம் நடத்தியும், கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மிகவும் ஆபாத்தான நிலையில் தான் உடலை மயானத்திற்கு எடுத்து செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, இனிமேலாவது அதிகாரிகள் தாமதபடுத்தாமல் மயானத்திற்கு பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget