மேலும் அறிய

பெண்ணை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண்ணை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் எழில் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 36). இவரது கணவர் கார்த்திக். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் புவனேஸ்வரி கணவரிடம் இருந்து பிரிந்து தனது மகள் லோகஸ்ரீயுடன் (17) வசித்து வந்தார். இந்நிலையில் திருமணமான அதே ஊரை சேர்ந்த குமார் (38) என்பவருக்கும், புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் இருவரும் நார்த்தாமலையில் உள்ள குமாரின் கோழிப்பண்ணையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 5.12.2019-ல் இருவரும் கோழிப்பண்ணையில் சந்தித்தனர். அப்போது புவனேஸ்வரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் குமார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமார், புவனேஸ்வரியை தாக்கி, அவரது சேலையால் கழுத்தை இறுக்கி உள்ளார்.

பெண்ணை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதனை தொடர்ந்து அவர் அங்கேயே மயங்கினார். பின் புவனேஸ்வரியின் மகள் லோகஸ்ரீக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உனது தாய் மயக்கமடைந்து கிடக்கிறார். அவரை வந்து அழைத்து செல் என கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து லோகஸ்ரீ சம்பவ இடத்திற்கு வந்து தாயை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புவனேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின் புவனேஸ்வரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக லோகஸ்ரீ கூறியுள்ளார். அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் புவனேஸ்வரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில் கீரனூர் போலீசார் குமாரை கைது செய்து புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பெண்ணை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை செய்த குற்றத்திற்காக குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கினார். மேலும் சிறையில் இருக்கும்போது அவருக்கு அங்கு பணி வழங்கி அதில் இருந்து வரும் வருவாயில் 20 சதவீதத்தை இறந்த பெண்ணின் மகளுக்கு வழங்க வேண்டும். மேலும் அபராத தொகையை புவனேஸ்வரி மகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் பரபரப்பு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!

CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு

T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?

Breaking News LIVE: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 3 பேர் உயிரிழப்பு

IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!

Embed widget