மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய மக்கள் - காரணம் என்ன..?

புதுக்கோட்டை மாவட்டத்தில் , பொதுப்பாதையை அடைத்து கழிவறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், செயலாளரை பூட்டி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் பாச்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பன்னீர் செல்வம் (வயது 60). இவர் மீது தொழிலதிபர்களுக்கு கடன் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி, கள்ள நோட்டுகளை மாற்றுவது, குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவது உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறமாக இருக்கும் வயல் மற்றும் தோட்டங்களுக்கு செல்ல அந்த பகுதியை பொதுப்பாதையாக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் திடீரென அந்த பொதுப்பாதையை அடைத்து அதில் கற்களை கொட்டி வைத்து, அந்த இடத்தில் கழிவறை கட்ட இருப்பதாகவும், அதனால் இனிமேல் இந்த பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பன்னீர்செல்வத்தையும், ஊராட்சி செயலாளர் முத்துக்குமாரையும் அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டுப்போட்டு பூட்டினர். தொடர்ந்து அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய மக்கள் - காரணம் என்ன..?
 
மேலும் ஊராட்சி மன்ற தலைவராக இவர் பொறுப்பேற்றது முதல் எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஏதேனும் கோரிக்கைக்கு சென்றால் கூட மக்களை அலட்சியமாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னையா மற்றும் அதிகாரிகள், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூட்டை திறந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளரை ஆலங்குடி போலீசார் வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்

Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை

கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?

ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்

Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?

இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை

மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?

Embed widget