மேலும் அறிய

திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவேரி பாலத்திற்கு அருகில் புதிய பாலம் கட்ட திட்டம். அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக நகரப்புற அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும், தரைவழி மார்க்கமாக இணைப்பது காவிரி பாலம் ஆகும். பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  காவேரி பாலம் 1971 ஆம் ஆண்டு கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 1976ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 540 மீட்டர், அகலம் 15 மீட்டர் ஆகும் .இந்த காவேரி பாலம்  திருச்சி மாவட்ட மக்களுக்கு ஒரு சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. பாலத்தின் மீது காலை , மாலை என இருவேளைகளிலும் மேற்க்கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் திருச்சி  மக்களுக்கு  ஒரு முக்கியமான சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் மாலை நேரத்தில் மக்கள் தங்களது குடும்பத்துடன் பொழுது கழித்து வருகிறார்கள். மெலும் விடுமுறை, பண்டிகை நாட்கள் என அனைத்து விதமான நாட்களிலும்  தன் நண்பர்களுடன் உரையாடுவது, குடும்பத்துடன் சுற்றி பார்ப்பது என ஒரு தவிர்க்கமுடியாத  சுற்றுலாத் தளமாக திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும்  இந்த பாலத்தை தாங்கி நிற்கும்  தூண்களில் ஏற்பட்டுள்ள இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்திற்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுகிறது. பேருந்து,சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை வாகன ஓட்டிகளால் உணரமுடிகிறது என மக்கள் தொடர்ந்து  தெரிவித்து வருகிறார்கள்.


திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரிவாக்க தூண்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை முழுமையான பலனை தரவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள். நவீன தொழில்நுட்ப முறையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைக்க அதற்காக கடந்த  2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1.35 கோடியும், மார்ச் மாதம் 2018ஆம் ஆண்டு 35 லட்சமும், செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு 15 லட்சம், நவம்பர் 2018 ஆம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாயும் சிறு மீட்கும் பணிக்காக செலவிடப்பட்டுள்ளது.


திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

மேலும் ஆய்வு செய்தபோது பாலத்தை தாங்கி நிற்கும் ஆறு தூண்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கியது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று உள்ளன. ஆனாலும் இன்னும் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்து உள்ளனர்.மேலும் காவிரி பாலத்தை தாங்கி நிற்கும் சில தூண்கள் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மையே. சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் முடிந்து விட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.  இதற்காக இந்த பாலத்தை முழு அளவில் புனரமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றுக்குள் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் அடிப்பகுதியிலிருந்து ஆய்வு செய்து புதிதாக புனரமைக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிதாக ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டு உள்ளோம்.



திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

இந்த பாலத்தின் வடிவமைப்பு தொடர்பான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என தமிழக நகர்புற அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். மேலும்  திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே புதிய பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை உணர்ந்து தான் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாலம் கட்டுவது நீண்ட காலத்திட்டம் ஆகும். எப்போது பணிகள் தொடங்கும் என்பது பற்றி இப்போது கூற முடியாது. அதே நேரத்தில் தற்போது உள்ள பழைய பாலத்தையும் முழு அளவில் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget