மேலும் அறிய

திருச்சி : ஸ்டாலின் விளம்பர பிரியர், பளுதூக்கும் போட்டிக்கு செல்லலாம்... முதலமைச்சரை கடுமையான விமர்சித்த ஈ.பி.எஸ்

தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் சொத்து வரியை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உயர்வு 2022-23ஆம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1,201 முதல் 1,800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது. 

இந்தநிலையில், தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தபடாது என்று தெரிவித்திருந்தனர். ஆனால், மக்கள் தாக்கு பிடிக்க முடியாத அளவிற்கு வீட்டு வரி உயர்வை கொடுத்துள்ளது. 

திருச்சி : ஸ்டாலின் விளம்பர பிரியர், பளுதூக்கும் போட்டிக்கு செல்லலாம்... முதலமைச்சரை கடுமையான விமர்சித்த ஈ.பி.எஸ்

மக்கள் மீது பெரிய சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சரானதில் இருந்து மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. வீட்டு மக்களை பற்றிதான் கவலைப்படுகிறார். மக்களுக்கு என்ன பிரச்சனை என்று ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லை என்றார். தொடர்ந்து, பொங்கல் தொகுப்பில் முறைக்கேடு, திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது, அரசு அதிகாரிகள் உண்மையாக செயல்பட முடியவில்லை, போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, இவற்றை தடுக்காவிட்டால் இனிமேல் திமுகவிற்கு எதிர்காலமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், பத்திரிக்கை செய்திகள் முக ஸ்டாலின் டீ குடிப்பதையும், பளு தூக்குவதை மட்டுமே காட்டுகிறது. எனவே, பளுதூக்கும் போட்டிக்கு ஸ்டாலின் அவர்களை அனுப்பலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget