மேலும் அறிய

24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

திமுகவின் மூத்த தலைவர்கள், ஆட்சியில் இருக்கும் போது ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் கடனை முழுமையாக அடக்க முடியும் - எச்.ராஜா பேட்டி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி பாஜக விவசாய அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசியது.. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பாக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறை, குறைகளை குறித்து கருத்து கேட்பு நடத்தி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று திருச்சியில் விவசாயிகளை சந்தித்து கருத்து கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 

மத்திய அரசு  விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் அளவிற்கு வேளாண்மையில் புரட்சி செய்த விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது, என்பது நாம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை தொடர்ந்து இந்திய நாட்டில் விவசாயிகளுக்கும் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறப்பாக மக்களுக்காக பணியாற்றிய தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம் பாஜக, மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாகும். வேறுபாடு, பிரிவினை இல்லாமல் திறமையானவளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

மேலும், சிறு,குறு விவசாயிகளுக்கு உதவிட மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் பல ஆயிரம் கோடி விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் மாநில அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் நெருங்குவதால் மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடங்கியுள்ளனர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து நிதிகளையும், முழுமையாக வழங்கி உள்ளது. ஆனால் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் திமுக ,காங்கிரஸ் ,பரப்பி வருகிறது. கடந்த முறை 32 சதவீதமாக இருந்த நிதியை, 2014 ஆண்டு மோடி பிரதமர் பதவி ஏற்ற உடன் 42 சதவீதமாக நிதிய உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பொய்யான தேர்தல் பிரச்சாரத்தை இவர்கள் இப்போது இருந்தே தொடங்கியுள்ளனர். 

தமிழ்நாட்டில் 4,000 கோடி ரூபாய் நிதி சாலைகள் கால்வாய்கள் அமைக்கப்பட்டதாக திருச்சி அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார். ஆனால் பாதிப்பு அதிகமானதால் 42% நிதி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நேரு கூறியுள்ளார். அப்போது மீதம் உள்ள 58 % பணம் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினார். 

24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

திமுகவின் மூத்த தலைவர்கள், ஆட்சியில் இருக்கும் போது ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் கடனை முழுமையாக அடக்க முடியும் என்றார்.

GST என்பது மத்திய,  மாநில ஆகிய 2 வகைபடும். அதில் மாநில நிதியை மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதை முழுமையாக கொடுத்துள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு குறைவாக தான் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள். நான் கேட்கும் கேள்விக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் பெறப்படும் வருவாயை மற்ற எந்த மாவட்டத்திற்கும் செலவு செய்யக்கூடாது என அப்பகுதி மக்கள் கூறினால் அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அல்லது திமுக அரசு ஏற்றுக்கொள்ளுமா?

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (இன்று) காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார்.

24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

மேலும், இவர்கள் டெல்லி சென்று கூட்டம் கூடி அராஜக தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகவும், பிரிவினை செய்வதற்காகவும் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஓட்டு வாங்குவதற்காக பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பொதுசிவில் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் அதை எதிர்த்து பேசுகிறார். ஆனால் திமுகவுடன் இலவச இணைப்பு விடுதலை சிறுத்தை கட்சி ஆகும். தொல்.திருமாவளவன் பட்டியலின சமுதாயத்தினருக்கு துரோகி ஆவார். தமிழ்நாட்டில் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த விவகாரத்தை குறித்து இதுவரை வாய் திறக்காத திருமாவளவன், இரண்டு சீட்டுக்காக திமுகவிடம் அடிமையாக உள்ளார்.

NIA அதிகாரிகள் சோதனை என்பது மிகத் துல்லியமான, சரியான தகவல்களை கொண்டு தான் நடைபெறும். அவர்கள் மற்றவர்களை போல சரியான தகவல் இல்லாமல் சோதனை செய்ய மாட்டார்கள். NIA அதிகாரிகளுக்கு சரியான தகவல்கள் வந்ததன் அடிப்படையிலேயே இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் வீட்டில் NIA சோதனை நடத்தியதற்கும் அதிகாரிகளிடம் சரியான ஆதாரம் இருக்கும். இந்த ஆவணங்களை வைத்து தான் சோதனையை நடத்தி இருப்பார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget