மேலும் அறிய

திருச்சி நாடாளுமன்ற தொகுதி நமக்கு ஒதுக்கவில்லை, ஆனாலும்,,,, - அமைச்சர் கே.என்.நேரு பேசியது என்ன?

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பணியும் செய்யாத பிரதமர் மோடியை , இந்தியாவில் எதிர்த்து பேசிய முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவார்.

முன்னாள் திமுக தலைவரின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடபட உள்ளது. இந்த நிகழ்ச்சியை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்  அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேச்சு..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக்கொண்டு இருந்தபோது, இத்தொகுதியை தோழமைக் கட்சிக்கு கொடுப்பது என தலைமை முடிவெடுத்தது. திமுக தலைமையின் உத்தரவை ஏற்று மனம் நோகாமல், முகம் சுளிக்காமல், தொடர்ந்து கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். என்பதற்காக பாடுபட்டு சிறப்பாக செயலாற்றிய நமது கழக தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி நமக்கு ஒதுக்கவில்லை, ஆனாலும்,,,,  - அமைச்சர் கே.என்.நேரு பேசியது என்ன?

அதேபோல பெரம்பலூர் தொகுதியில் நமது தோழர்கள் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து அத்தொகுதியில் கடுமையாகவும், சிறப்பாகவும் பாடுபட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறோம். என்றைக்கும் நீங்கள் சொல்கின்ற பணிகளை தட்டாமல் செய்பவனாக நான் இருப்பேன். அதுபோல நமது சட்டமன்ற உறுப்பினர்களும், நமது உள்ளாட்சி பிரதிநிதிகளும் இருப்பார்கள்.

முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நாம் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 402 ஊராட்சிகள் 2 ஆயிரம் கிராமங்கள் உள்ளன என இன்று காலை நமது மாவட்ட ஆட்சியர் என்னிடம் சொன்னார்.

அனைத்து பகுதியிலும் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்தை வைத்து, அவருக்கு மரியாதை செலுத்து கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தவறாமல் வழங்க வேண்டும். அதேபோல மாநகரத்திலும் வட்ட செயலாளர்கள், தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி நமக்கு ஒதுக்கவில்லை, ஆனாலும்,,,,  - அமைச்சர் கே.என்.நேரு பேசியது என்ன?

இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உழைத்தவர் மு.க.ஸ்டாலின்

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் 40 ஆண்டு காலம் செய்த பணியை, நமது தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்ற 3 ஆண்டு காலத்தில் செய்து முடித்துள்ளார். இந்தியாவில் அரசியல் கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை அமைக்கக்கூடிய வகையில் உயர்ந்துள்ளார். இக்கூட்டணியில் இருந்து நித்தீஷ் குமார், மம்தா பானர்ஜி வெளியே போனார்கள். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உழைத்தவர்களில் முதன்மையானவர் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பணியும் செய்யாத பிரதமர் மோடியை , இந்தியாவில் எதிர்த்து பேசிய முதல் முதலமைச்சர் நமது தலைவர் மு.க.ஸ்டாலின். தோழமைக் கட்சிகள் மத்தியில் நமது கட்சிக்கு மரியாதை பெற்று தந்திருக்கிறார்.

திருச்சி பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் இதுகுறித்து பரிந்துரை செய்ய இக்கூட்ட தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பேசினார். இந்த கூட்டத்தில் மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனி இரவு 11 மணிக்கு மேல் தியேட்டர்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்ல" ஐகோர்ட் அதிரடி!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!
BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!
Mk Stalin: விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
Teachers Protest: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு; பிப். முதல் அடுத்தகட்டப் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
UP Laddu Fest: அச்சச்சோ..!  லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
UP Laddu Fest: அச்சச்சோ..! லட்டு திருவிழாவில் கோர விபத்து, பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்
Embed widget