மேலும் அறிய

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து ஒழித்து கட்டும் வரை போராடுவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரகநேறி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இன்று கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிடம் மற்றும் 10 மற்றும் 12 வகுப்புகளில் அரசு பள்ளியில் பயின்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக கைபேசி வழங்கப்பட்டுள்ளது. 

முதலில் நாம் அனைவரும் நம்முடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் நமது இயக்கத்தின் மீது  யார் அவதூறான கருத்துக்களை தெரிவித்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க முடியும். 

மேலும் திமுக இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போன்று நாம் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது இயக்கம் வலுபெறும் தீவிரமடையும் அதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார். 

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ்

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த நமது இயக்க நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றிகள். 

தமிழ்நாட்டிலே முதலில் கழக நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லும் கூட்டம் திருச்சியில் நேற்று கழக முதன்மைச் செயலாளரின் கே.என். நேரு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி எம்பி பதவி ஏற்ற பிறகு, தேர்தல் நேரத்தில் மக்களை எவ்வாறு சந்தித்து வாக்கு சேகரித்தமோ அதேபோன்று வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து நன்றி சொல்வோம் என்றார்.

இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை  நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர். நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம். திமுக தலைவர் நமது முதலமைச்சர் என்ன கட்டளை இடுகிறாரோ அதனை செயல்படுத்துவோம் எனக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget