மேலும் அறிய

மியான்மர் வேலைவாய்ப்பு மோசடி..மீட்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்..2 இடைத்தரகர்களை கைதுசெய்த போலீஸ்!

மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 2 இடைத்தரகர்களை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 2 இடைத்தரகர்களை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மியான்மர் நாட்டிலிருந்து மீட்டு வரப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மியான்மரில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு எனக்கூறி இளைஞர்களை ஏமாற்றிய 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவரின் புகாரில் மஹாராஷ்டிரா டோங்கரியில் நவாஸ்கான், உமர் காதர் என்ற இரண்டு ஏஜெண்டுகளை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பல பேர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லா, தென்காசி விக்னேஷ், கோயம்புத்தூர் வெஸ்லி, குமார், வேலூர் அகமது, சச்சின், ஊட்டி சிவசங்கர், பொள்ளாச்சி செளந்தர், அரியலூர் செல்வி, கன்னியாகுமரி பிரசாந்த, ஜெனிகாஸ், கரூர் மணிக்குமார், திருச்சி செபாஸ்டின் ஆகிய 13 பேர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  அவர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் , தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கென்று பல்வேறு ஏஜென்டுகள் மூலம் அழைத்து சென்று தாய்லாந்து நாட்டிற்கு அழைத்து சென்று பக்கத்தில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு அவர்களுக்கு சொன்ன வேலையை தவிர்த்து மற்ற வேலைகளை கொடுத்துள்ளனர். அதனை செய்ய மறுத்துள்ளனர்.

அங்கு சிக்கி தவித்த நபர்கள் குறித்த செய்தியின் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு தகவல் கொடுத்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார். தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தற்போது அழைத்து வந்துள்ளனர். அவர்களை இல்லம் செல்ல வழிவகை செய்துள்ளோம். சுமார் 50 தமிழர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வருகிறது. 
 
அழைத்து சென்ற ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்கவில்லை, வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் தமிழக அரசில் பதிவு செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரையும் அழைத்து பேசி இருக்கிறோம். அவர்கள் நிலை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று பொருளாதார ரீதியான உதவிகள் செய்யபடும். இது குறித்து மியான்மரில் சிக்கித் தவித்தவர்கள் பேசுகையில் தகவல் தொழில்நுட்ப வேலை இல்லாமல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைக்கும் வேலையை செய்ய வேண்டும் என நிர்பந்தித்தாகவும் செய்ய மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், அதற்கு தண்டனைகளை கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மீட்டு வந்த அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget