மேலும் அறிய

Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுவார் - உதயநிதி ஸ்டாலின்

மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுகிறார் - திருச்சி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் பேசிய அவர்.. இந்த முறை அருண் நேருவை 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். வாக்கு பெட்டியில் முதல் பெயர் அருண் நேரு பெயர் அருகில் உதயசூரியன் சின்னம் அருகே பட்டன் இருக்கும் அந்த பட்டன் தான் மோடிக்கு வைக்கிற வேட்டு. அருண் நேரு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால் அருண் நேரு மத்திய அமைச்சர். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு பெரிய மின்னனு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். 

சமயபுரம் கோவிலுக்கு நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து சமயபுரம் கோயில் வரை நடைபாதை அமைத்து தரப்படும். மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஏரிகள் நீர்நிலைகள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளிட்ட கோரிக்கை எல்லாம் நான் சொல்லி இருக்கக்கூடிய வாக்குறுதிகள். 2014ம் ஆண்டு ஒரு சிலிண்டர் விலை 450 ரூபாய் தற்போது 1200 ரூபாய். மோடி அவர்கள்  வாயில் வடை சுட்டு இருக்கிறார்.நரேந்திர மோடி அவர் சுட்டவடை அவரே சாப்பிட்டு விடுவார்.இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் தரப்படும் என தலைவர் அறிவித்துள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் குறைத்து தரப்படும் என தெரிவித்துள்ளார். ஒரு கிட்ட டீசல் விலை 65 ரூபாய்க்கு குறைத்து தரப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார் .இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாவடிகள் அகற்றப்படும். 


Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுவார் -  உதயநிதி ஸ்டாலின்

நான் கலைஞர் பேரன் சொன்னால் சொன்னதைச் செய்வேன்

அருண் நேருவை நீங்கள் வெற்றி பெற வைத்து விட்டீர்கள் என்றால் நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழி தருகிறேன். மாதத்திற்கு இரண்டு முறை பெரம்பலூர் தொகுதிக்கு அமைச்சருடன் வந்து உங்கள் குறைகளை கேட்டு முதல்வரிடம் தெரிவித்து நிவர்த்தி செய்வேன். நான் கலைஞர் பேரன் சொன்னால் சொன்ன சொல்லை செய்வேன். நீங்களும் கலைஞர், தந்தை பெரியார், அண்ணாவை வின் பேரன்கள் தான். நாம் அத்தனை பேரும் கொள்கை லட்சிய பேரன்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பம் தான் அதுவும் திமுக கலைஞர் குடும்பம் தான் வாழுகிறது என்று மோடி சொல்லுகிறார் ஆமாம் நானும் சொல்லுகிறேன். ஒட்டுமொத்த தமிழ்நாடுமே கலைஞரின் குடும்பம் தான். மத்திய பிரதமர் மோடி அவர்கள் 10 வருடமாக ஆட்சியில் இருந்து உங்களால் வாழ்வது ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டும்தான்.ஒன்பது வருடத்தில் அதானி கம்பெனி மட்டும் ஆயிரம் மடங்கு வளர்ச்சி அனைத்து பொது துறையின் தூக்கி அதானி கையில் கொடுத்துள்ளார். தனியார் துறையிலிருந்து அரசு போக்குவரத்து துறையை அரசு துறையாகியது நமது தலைவர் கலைஞர்.நான் சவால் விட்டு சொல்கிறேன் 10 வருடத்தில் ஏதாவது ஒரு துறையை பொதுறையாக ஆக்கியிருக்கிறதா?அதானி கையில் அனைத்தையும் தூக்கிக் கொடுத்தது தான் மோடி அவர்கள் செய்த சாதனை.

மக்களுடைய ஆதரவு பெற்று முதலமைச்சர் ஆனவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், யார் காலிலாவது விழுந்தாரா? டேபிள் புகுந்தாரா? தவழ்ந்து போனாரா? உலகத்திலேயே இப்படி ஒரு முதலமைச்சர் ஆனது கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி முதலமைச்சரானது இப்படித்தான். பாதம் தாங்கி பழனிச்சாமி இப்படித்தான் முதலமைச்சரானார். இரண்டு நாளா தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெருமையாக பேசி வருகிறார். அந்த அம்மா காலில் விழுந்து தான் தவழ்ந்து தவழ்ந்து தான் போய் அமைச்சரானேன். இப்போ போய் அந்த அம்மா காலில் விழுந்தால் எட்டி உதைத்து விடுவார்.


Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுவார் -  உதயநிதி ஸ்டாலின்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிதரவில்லை

உதயநிதிக்கு எப்போழுது பார்த்தாலும் வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும் கல்லை மட்டும் தான் காட்டுவார். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை நான் காட்டிக் கொண்டுதான் இருப்பேன். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை நான் கல்லை தரமாட்டேன். இதன்பிறகு பாஜக ஆளுகின்ற ஐந்து மாநிலங்களில் இதேபோன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மருத்துவமனை கட்டி செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. நம்முடைய தலைவர் கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அறிவித்து ஒரு வருடத்தில் கட்டி முடித்து சாதனை படைத்தார்.இதுதான் பத்தே மதத்தில் கட்டி முடித்து சாதனைப்படுத்துவது நம்முடைய தலைவர் அவர்கள். இதுதான் மோடி அரசுக்கும் திராவிட அரசுக்கும் இருக்கின்ற வித்தியாசம்.

கொரோனா தொற்று காலத்தில் பிபி கிட் அணிந்து நோயாளிகளே பார்த்து ஆய்வு செய்தவர்  நம்முடைய முதல்வர். ஆனால் மோடி அவர்கள் எல்லாரும் வீட்டிற்குள் ஒளிந்து கொள்ளுங்கள் விளக்கு ஏற்றுங்கள் ஒலி எழுப்புங்கள் இந்த சத்தத்தை கேட்டு கொரொனா வைரஸ் ஓடிவிடும் என்று சொல்லுகிறார். இதுதான் கொரோனா நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆட்சிக்கட்டில் ஏறி முதல் கையெழுத்து மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டம். எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ் தான். தற்போது மக்கள் பிங்க் பேருந்து என்று சொல்லாமல் ஸ்டாலின் பேருந்து என்று செல்லமாக கூறுகிறார்கள். இந்த மூன்று வருடத்தில் மட்டும் 460 கோடி பயணங்கள் மகளிர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் இதுதான் அந்தத் திட்டத்தின் வெற்றி. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம் ஆடல் அரசு.


Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுவார் -  உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் மோடியை இனிமேல் 29 பைசா என கூப்பிடுங்கள்..

கல்வி உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் என்கின்ற திட்டம் கொண்டு வந்தார். தேர்தல் அறிக்கை சொல்லாத திட்டம் காலை உணவு திட்டம் இந்தியாவில் முதல்முறையாக கொண்டு வந்த திட்டம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று உள்ளார்கள்.இந்த திட்டம் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் மட்டுமில்லாமல் கன்னடா  நாட்டில் பயன்படுத்துகிறார்கள். உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிற முதலமைச்சர் நம் தமிழக தளபதி முதல்வர்.கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. இது மிகப்பெரிய திட்டம் 160 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் ஒரு கோடியே 15 லட்சம் பேர் மாதமாதம் உரிமைத்தொகை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.நாலு மாதத்திற்குள் சரிபார்ப்பு முடிவடையும். தேர்தல் முடிந்து ஐந்து ஆறு மாதத்தில் 100% அனைவருக்கும் மகளிர் உரிமைத்துவகை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.நாம் ஒரு பக்கம் என்ன செய்தோம் என்ன செய்யப் போகிறோம் என்கிற திட்டங்களை சொல்லி வருகிறோம் இன்னொரு பக்கம் நரேந்திர மோடி அவர்கள் கடந்த பத்து வருடமாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறார் ஏதாவது செய்து இருக்கிறாரா? 2016 ஆம் ஆண்டு நள்ளிரவில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார் இதனால் லட்சக்கணக்கான போர் ஏடிஎம் வாசல் நின்னு இறந்து போனார்கள். புதிய இந்தியா பிறக்கப் போகுது என்று சொன்னார் யாராவது பார்த்தீர்களா புதிய இந்தியா பிறக்கிறதை.

ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட போகிறேன் என கூறினார் 15 பைசா வது போட்டாரா இருப்பதையும் ப பிடுங்கிவிட்டார்.4ம் தேதி வரை அவர் தான் ஒன்றிய பிரதமர். அவருக்கு செல்ல பெயர் வைத்து இருக்கிறேன். அவரை இனிமேல் பேர் சொல்லி கூப்பிடாதீர்கள். உங்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன் அவருக்கு 29 பைசா என கூப்பிடுங்கள். இதுவே செல்லாக்காசு தான். நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வரி ஒரு ரூபாய் ஒன்றிய அரசுக்கு கொடுத்தால் திருப்பி 29 பைசா கொடுக்கிறார்கள். ஆனால் பிஜேபி ஆளுகின்ற மாநிலத்திற்கு வாரி வாரி  கொடுக்கிறார்.சென்ற வருடம் குஜராத்தில் மழை பெய்தவுடன் அங்கு சென்று வாரி வாரி நிதி வழங்கி கொடுத்தார்கள். டிசம்பர் மாதம் நாலாம் தேதி மிகப்பெரிய மழை பெய்து 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது அதேபோல தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்தது. மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை.ஆனால் நம்முடைய தலைவர் அவர்கள் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பத்திற்கும் ஆறாயிரம் ரூபாயும் வீடு இடிந்தவர்களுக்கு புதிய வீடும் கட்டிக் கொடுத்துள்ளார்.


Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட மக்களுக்கு தராமல் அவரே சாப்பிட்டு விடுவார் -  உதயநிதி ஸ்டாலின்

தேர்தலில் திமுக - கூட்டணிகட்சிகள் 40/40 வெற்றி பெற வேண்டும்

நான் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று ஒன்றிய அரசு 29 பைசாவை கேட்கிறேன் அதற்கு அவர் தானே பதில் சொல்ல வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி பாதம் தாங்கி பழனிச்சாமிக்கு கோவம் வருகிறது. ஏன் கோவம் வருகிறது என்றால் அதற்கு பெயர் தான் கள்ளக்காதல். தாங்கள் தைரியமாக 29 பைசா மோடியை இவ்வளவு கேள்வி கேட்கிறோம். இதுவரை பாதந்தாங்கி பழனிச்சாமி 29 பைசா மோடியை பார்த்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு இருப்பாரா. ஆளுக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றி பேசுபவர் அவர்.நான் பேசியது தான் பேசுவேன் எங்களை கொள்கையைத்தான் பேசுவேன் சிஏஏ சட்டம் வேண்டாம் என்று தான் பேசுவேன் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டுமென்று தான் பேசுவேன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பேசுவேன் எங்கள் மாநில உரிமையை திருப்பி கொடுங்கள் என பேசுவேன் பாதந்தாங்கி பழனிச்சாமி அவர்கள் போன்று நாங்கள் பச்சோந்தி கிடையாது ஆளுக்கு தகுந்தார் போல் பேசுவதற்கு.ஓ பன்னீர்செல்வத்தை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள். மோடி அவர்களைப் பார்த்தால் தரையில் அப்படியே படுத்து விடுவீர்கள் பார்த்தால் குட்டிகரணம் அடிப்பீர்கள் டிடிவி தினகரன் பார்த்தால் என்ன வேணா பண்ணுவார்? அதே போல சசிகலாவை பார்த்தால் முட்டிகால் போட்டு டேபிள் சேர் கீழே படுத்துக்குவார்.

சசிகலா மூணாவது மனிதர் அல்ல அவர் காலில் விழுந்தது தவறு இல்லை நான் கேட்கிறேன் இப்போது திருப்பி போய் அவரது காலில் விழு பார்ப்போம் ஓங்கி ஒரே உதையில் மிதிப்பார் அந்த அளவுக்கு நம்பிக்கை துரோகி பாதம் தாங்கி பழனிச்சாமி.

2021 ஆம் தேர்தல் விடியல் தேர்தலை கொடுத்துள்ளீர்கள் அதுபோன்று இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது அடிமைகளின் எஜமானர்கள் அடித்து விரட்டுவதற்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கு விடியல் ஆட்சி கொடுப்பதற்கு நம்முடைய தலைவர் யாரை பிரதமராக கை காட்டுகிறார் அவர் ஜெயிப்பதற்கு நீங்கள் ஓட்டு போட வேண்டும்.ஜூன் 3ம் தேதி கலைஞர் 101 வது பிறந்தநாள் இந்த முறை கலைஞருக்கு நாம் கொடுக்கக்கூடிய பிறந்தநாள் பரிசு 40க்கு 40 என வெற்றி பெற்று கலைஞரின் காலடியில் வைக்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Embed widget