மேலும் அறிய

Lok Sabha Election 2024: அ.தி.மு.க. பிரச்சார கூட்டம்! திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

Lok Sabha Elections: திருச்சியில் அதிமுக முதல் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Loksabha Election: பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது தி.மு.க., அ.தி.மு.க.,  பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என நோக்கில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய முன்தினம் 22 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர்  பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்‌‌ அருண் நேருவை ஆதரித்து முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சி தொடங்கினார்.

இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சியில் தொங்குகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள 40 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஒரே மேடையில் ஆதரித்து பிரச்சாரத்தில் தொடங்குகிறரார்.

Lok Sabha Election 2024: அ.தி.மு.க. பிரச்சார கூட்டம்! திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பிரச்சாரம்

அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், ஶ்ரீரங்கம் தொகுதி வண்ணாங்கோயில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடியார், மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார்.

திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணியளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகை தருகிறார். கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எஸ்டிபிஐ கட்சி மாநில  தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Lok Sabha Election 2024: அ.தி.மு.க. பிரச்சார கூட்டம்! திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாவட்டம், வண்ணாங்கோவிலில் இன்று 24.03.2024 தேதியன்று நாடாளுமன்ற தொகுதிகளின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று 24.03.2024-ஆம் தேதி மதியம் 12.00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள், அவசர தேவை வாகனங்கள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற அனைத்து வாகனங்களையும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.

Lok Sabha Election 2024: அ.தி.மு.க. பிரச்சார கூட்டம்! திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

போக்குவரத்து வழித்தட மாற்றம்

சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகரம் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்

திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறை, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் வழியாக செல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் வாகனங்கள் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, நொச்சிமேடு ஜங்சன் வழியாக செல்ல வேண்டும்.

மணப்பாறையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் நொச்சிமேடு ஜங்சன். விராலிமலை, மணிகண்டம், பஞ்சப்பூர் வழியாக செல்ல வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget