மேலும் அறிய

Kalaignar Magalir Urimai Thogai Scheme: அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள்.

அரியலூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை அறிய உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் முதல் கட்டமாக பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் 55 லட்சம் பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தகுதி இருந்தும் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி முதல் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறியவும், அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா - 9626725241, 04329228151, அரியலூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோவிந்தராசு - 9843869337, 04329222058, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் உமாசங்கரி -7598720601, 04331245352, அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) பசுமதி - 9786326209, 04329222062 ஆகியோர் எண்களுக்கு தொலைபேசியில் அழைத்தால் அவர்கள் உதவி செய்வார்கள்.

Kalaignar Magalir Urimai Thogai Scheme: அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள்.

மேலும், ஜெயங்கொண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் அண்ணாதுரை- 9095689998, 04331-250220, செந்துறை தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வக்குமார் - 9025277223, 04329242320, ஆண்டிமடம் தலைமையிடத்து துணை தாசில்தார் பார்த்திபராஜன் - 9841304410, 04331299800 ஆகியோரை தொடர்பு கொண்டு பயனாளிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையங்கள் வருகிற 30-ந் தேதி வரை செயல்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம். மேலும், இந்த திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு வருகின்ற குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஓ.டி.பி. எண்கள் மற்றும் இதர விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget