மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வருகை தருவது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பறவைகள் இனபெருக்கத்திற்காக பல்வேறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் வருகைபுரிகின்றன. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர் மாதத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு பறவைகள் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள இச்சூழ்நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. அன்னவாசல் கண்மாய், ஆரியூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய், பொன்பேத்தி ஏரி, செய்யானம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், காரையூர் காரை கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், ஏனாதி கண்மாய், கொன்னை கண்மாய், நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர் கண்மாய், குளத்தூர் கண்மாய், திருமயம் தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

இந்த பணியானது காலையில் 6 மணி முதல் தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு பறவைகள் நிபுணர், 2 தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ. மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற்றிருந்தனர். பைனாகுலர் மூலம் பறவையை கண்டு, அதன் பெயரை ஒருவர் நோட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார். இதேபோல பறவையை கேமரா மூலமும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பறவை இனங்கள் அதிக அளவில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தது தெரியவந்தது. இதேபோல உள்நாட்டு பறவை இனங்களும் கணக்கெடுக்கப்பட்டன. ஆங்காங்கே கூட்டமாக பறந்த பறவைகளையும் கணக்கெடுத்துக்கொண்டனர். புதுக்கோட்டை வனசரக அதிகாரி தீபா தலைமையில் குழுவினர் அன்னவாசல் உள்ளிட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் மூலம் பறவைகளுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்க பெறுகின்றனவா? என்பதை ஆராய முடியும். கவிநாடு கண்மாயில் பறவைகள் தங்கியிருந்த பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட போது அங்கு மீன்பிடித்த சிறுவர்களை வனத்துறையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் எச்சரித்து அனுப்பினர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget