கொலை...! கஞ்சா...! திருட்டு - திருச்சியில் 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
’’திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை’’
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் அச்சமான ஒரு சூழ்நிலையில் இருபதாகவும், உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க, காவல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் திருச்சி மாநகரம், ஏர்போர்ட் காவல் நிலையம் வயர்லெஸ்ரோட்டில் நடந்து சென்றவரிடம் பாபு (எ) மிட்டாய்பாபு என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28ஆம் தேதி அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிராட்டியூர் அருகில், கரேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 3ஆம் தேதி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையம் அண்ணாசிலை அருகில் நடந்து சென்றவரிடம் எதிரி விஜயகுமார் என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் இம்மாதம் 8ஆம் தேதி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் மாளிகை அருகில், சாலையில் நடந்து சென்றவரிடம் மதிரி தக்காளி முபாரக் முகமது என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கடந்த மாதம் 11ஆம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், மணிகண்டன் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவானால் வெட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோபாலகிருஷ்ணன் (20) நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமுதாய கட்டண கழிப்பிடம் அருகில், கஞ்சா விற்பனை செய்ததது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி தினேஷ்குமார் (26) என்பவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் மேற்படி வழக்குகளின் குற்றவாளிகளான பாபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகளும், சுரேஷ் மீது 2 வழக்குகளும், விஜயகுமார் மீது பல்லேறு காவல் நிலையங்களில் 43 வழக்குகளும், தக்காளி முகமது முபாரக் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகளும், கோபாலகிருஷ்ணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், தினேஷ்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 21 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரிகள் பாபு (எ) மிட்டாய்பாபு, கரேஷ், விஜயகுமார், தக்காளி முபாரக் முகமது.
மேலும் முபாரக் கோபாலகிருஷ்ணன். தினேஷ்குமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆனையர் கார்த்திகேயன், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீ ழ் கைது செய்ய ஆணையிட்டார். மேலும் திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆனையினை சார்வு செய்தும், குற்றவாளிகளை சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரித்துள்ளார்.