திருச்சி மத்திய மண்டலத்தில் 4 நாட்களில் மட்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 275 பேர்கள் கைது
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் போதை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 275 பேர் கைது , மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி மத்திய மண்டலத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காவல் துறை அதிகாரிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு சென்று குழந்தைகளுக்கு எதிரான நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க மூன்று விதமான திட்டங்களை வைத்து செயல்படுகிறோம் அதில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். பாலியல் குற்றங்களில் ஏற்கனவே ஈடுபட்ட குற்றவாளிகள் என்று சரித்திர தொடங்கி கண்காணிப்பது, குற்றத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு அந்த சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு எந்த விதமான சூழல்களை பாதுகாப்பாக உருவாக்குவது போன்ற கோணங்களில் குற்றங்களை தடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். இப்போது பெண்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு தாமாக முன்வந்து புகார்களை பதிவு செய்கின்றனர்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளி கல்லூரிகள் அருகில் உள்ள அல்லது பிற இடங்களிலோ போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாகவே தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனையில் நடத்தப்பட்டு வருகின்றன இரண்டு நாட்களுக்கு முன்பு நாகையில் அதிக அளவில் கஞ்சா மற்றும் தஞ்சாவூரில் ஒரு டன் மதிப்பிலான போதை தரும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் போதை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலாத் தலங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சுதந்திரம் என்பது மற்றவர்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் சட்டத்தை மாணவர்கள் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்தால்தான் சுதந்திரம் அதை மீறி நடப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திசுச்சி மத்திய மண்டலமான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவற்றை முற்றிலுமாக தடுக்க அனைத்து இடங்களிலும் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் போதை ஊசிகள் அதிக அளவில் நடப்பதாக காவல்துறைக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பவர்களை சுற்றி வளைத்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் திருக்கோகர்ணம் பகுதியில் போதை ஊசிகள் விற்பனை செய்த மணி, மணிகண்டன், ஹரிகிருஷ்ணன், சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர் குற்ற சம்வங்களில் ஈடுப்பட்டு வரும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என மத்திய மண்டல ஐ ஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.