"நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால்..?" - அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் நேரு
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் போக்குவரத்துதுறை பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “திருச்சியில் இன்று கும்பகோணம் கோட்டத்தில் தான் சிறப்பாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறுகிறோம். நாளை மதுரைக்கு சென்றால் மதுரை கோட்டத்தில் பணியாற்றுபவர்கள் தான் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்போம், இதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. போக்குவரத்து துறை, பள்ளிகல்விதுறை தான் லாபம், நஷ்டம் பார்க்காமல் இயங்கி வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் நகராட்சி நாங்கள் ஒரு நாள் சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் போக்குவரத்து துறை, பள்ளிகல்விதுறை எண்ணாகும். எல்லாத் துறைகளின் சேவை முக்கியமானது. ஆனால் நகராட்சி நிர்வாக துறை மிக முக்கியமானதாக உள்ளது. நாங்கள் 2 மணி நேரம் சுத்தம் செய்யவில்லை என்றால் நாறிப் போய்விடும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வருடத்திற்கு 3000 அரசு பேருந்துகள் நம் துறையின் கீழ் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சியில் இருந்த போது தான். கலைஞர் காலத்தில் தான் அதிகமான போக்குவரத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வருடம் தோறும் ஊதிய உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளிகளின் ஓய்வூதிய பலன் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார்கள், இது மிக மிக வரவேற்கதக்கது. ஓய்வூதிய பலன்களை அப்போது எல்லாம் 5 வருடம் கூட கொடுக்க முடியாத நிலை எல்லாம் இருந்தது. ஆனால் தற்போது ஓய்வு பெற்று வீட்டிற்கு செல்லும் போதே வாங்கி விட்டு செல்லாலாம்” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

