மேலும் அறிய

“ஆளுநருக்கு இது வேலை இல்லை; ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது சந்தேகம்” - சீமான்

திமுக மற்றும் பாஜக மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருவெறும்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளரை சந்தித்து பேசும்போது... "ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்ற வரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்.

இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுத்தும். இவர்கள் ஆட்சியாளர் இல்லை. இவர்கள் வரி என்ற பெயரில் இருக்கிறார்கள். இது மாறி மாறி தான் நடைபெறும். பொங்கலுக்கு இலவசமாக பொருட்கள் வழங்குவதற்காக குஜராத்தில் கொள்முதல் செய்து வழங்கினர். அப்போது அங்கு கட்டுப்பாடு ஏற்பட்டது போன்ற சூழல்தான் தமிழகத்திலும் ஏற்படும். சாதனை என்று சொல்ல முடியாது. நாடும் நாட்டு மக்களும் பட்டிருக்கின்ற வேதனைகளைதான் விளக்கி பேச வேண்டும். அதானியை வளர்த்து விட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள். எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள்.


“ஆளுநருக்கு இது வேலை இல்லை; ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது சந்தேகம்” - சீமான்

மேலும், எந்தத் துறையிலும் ஒரு வளர்ச்சியும் இல்லை. அவருடைய ஆட்சி அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார்கள். அதே போன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது உதயநிதியை துணை முதல்வராக ஆக்கி விடுவார்கள். திமுக மற்றும் பாஜக மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது. செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள். அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில் அதனை தற்போதையிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். வெறும் செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள் சேவை அரசியல் இவர்கள் செய்யவில்லை. ராணுவ வீரரின் புகார் வேதனை அளிக்கிறது. நாட்டைக் காப்பாற்ற எல்லையில் நிற்கும் வீரருக்கு தன் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ பதிவு செய்தது வேதனை அளிக்கிறது. இப்படி இருந்தால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் எப்படி ராணுவத்தில் சேர விரும்புவார்கள். ஆளுநர் இதையெல்லாம் எங்கு கவனிக்க போகிறார்? அவருக்கு இது வேலை இல்லை. அவருக்கு கொடுத்த வேலையை அவர் தற்போது செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. இஸ்லாமிய சிறை கைதிகளை இவர்கள் விடுதலையும் செய்ய மாட்டார்கள். அதே போன்று சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் விடுதலை செய்ய மாட்டார்கள். அதற்கு வேறு ஆட்சி மாறினால் தான் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (21-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (21-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
பயிர்க்கடன் தள்ளுபடி போராட்டத்துக்கு வந்த விவசாயி திடீரென உயிரிழந்ததால் அதிர்ச்சி
பயிர்க்கடன் தள்ளுபடி போராட்டத்துக்கு வந்த விவசாயி திடீரென உயிரிழந்ததால் அதிர்ச்சி
3 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை! பயணிகள் உற்சாகம்
3 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை! பயணிகள் உற்சாகம்
பெண் போலீஸாரை மதிக்காமல் நடுரோட்டில் அடாவடி செய்த தனியார் பேருந்துக்கு செக் – காவல் ஆணையர் காமினி அதிரடி அபராதம்!
பெண் போலீஸாரை மதிக்காமல் நடுரோட்டில் அடாவடி செய்த தனியார் பேருந்துக்கு செக் – காவல் ஆணையர் காமினி அதிரடி அபராதம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump on Alert: எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
Annamalai:
Annamalai: "லண்டனிலே பணம் இல்லை.. தமிழ்நாட்டிற்கு கொடுக்க அவங்களுக்கு ஏது காசு?" விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
Ukraine Attack Russia: ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
ஆத்தாடி, 1600 ட்ரோன்களா.! ரஷ்யாவை சரமாரியாக போட்டு சாத்திய உக்ரைன்; 2 ரஷ்யர்கள் உயிரிழப்பு
Iran Warns Trump: ட்ரம்ப்புக்கு 7 கன்டிஷன்கள்; ‘CODE 100‘ வார்னிங் கொடுத்த ஈரான்; அலெர்ட் மோடில் அமெரிக்கா, இஸ்ரேல்.!
ட்ரம்ப்புக்கு 7 கன்டிஷன்கள்; ‘CODE 100‘ வார்னிங் கொடுத்த ஈரான்; அலெர்ட் மோடில் அமெரிக்கா, இஸ்ரேல்.!
காட்டுல உங்க EV கார் திடீர்னு நின்னுடுச்சுனா என்ன பண்றது.? பயப்படாதீங்க, அதுக்கான தீர்வு இதோ
காட்டுல உங்க EV கார் திடீர்னு நின்னுடுச்சுனா என்ன பண்றது.? பயப்படாதீங்க, அதுக்கான தீர்வு இதோ
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Embed widget