திருச்சியின் அடையாளம் - முதலாம் உலக போரின் நினைவு சின்னம் பற்றி தெரியுமா..?
திருச்சி மாவட்டத்தில் காந்தி மார்க்கெட் அருகே இன்றளவும் திருச்சியின் அடையாளமாக விளங்கும் முதலாம் உலகப் போருக்கான நினைவுச் சின்னம் பற்றி விரிவாக பார்போம்.
திருச்சியில் இருந்து சுமார் இந்திய ராணுவத்தின் சார்பாக முதலாம் உலகப் போரில் 302 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 41 வீரர்கள் போரின் பொழுது வீரமரணமடைந்தனர். அந்தப்படை வீரர்களின் நினைவாக, அரசாங்கம் ஒரு பெரிய கடிகாரத்தை திருச்சியில் நினைவு சின்னமாக அமைத்தது. கடிகார கோபுரம் என அனைவராலும் அறியப்பட்ட இந்த நினைவுச் சின்னம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், பர்மிய அகதிகள் உட்பட சுமார் 25 வர்த்தகர்கள், நினைவு சின்னத்தை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்து அங்கு தங்கள் கடைகளை நிரந்தரமாக அமைத்துக் கொண்டார்கள். இதனால் நினைவு சின்னத்தை தடையின்றி வந்து பார்க்க இடையூறாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, 27 பிப்ரவரி 2013 அன்று திருச்சி மாநகராட்சி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பிற சேவை அமைப்புகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று நினைவு சின்னத்தை சீரமைக்க முடிவு செய்தது. அங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகளின் (பர்மிய அகதிகள் நடத்தப்படும் கடைகளைத் தவிர்த்து) உரிமத்தை ரத்து செய்தனர். மேலும் நினைவுச் சின்னத்தை சுற்றி இருந்த கடைகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து போர் நினைவு சின்னமாக இன்றளவும் பாதுக்காகப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலளர்கள் கூறுகையில், திருச்சியை பொறுத்தவரை வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பல உள்ளது. அதில் முக்கியமான ஒன்று திருச்சியின் மையப்பகுதியில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு என்ற நினைவுச்சின்னம் 1914 - 1919 ஆம் ஆண்டிற்கும் இடையே நடைபெற்ற முதலாம் உலகபோரில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 302 போர் வீரர்கள் கலந்துக்கொண்டனர். இதில் 41 பேர் போரில் மரணம் அடைந்தனர். வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மணிக்கூண்டு நினைவு சின்னத்தை அமைத்தனர். இத்தகைய சிறப்பு மிக்க சின்னத்தை பராமரிக்க வேண்டும், மேலும் வருங்கால தலைமுறையினர் அனைவரும் அறிந்துகொள்ளும் அளவிற்கு இதைபற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு இப்போதிலிருந்தே வரலாற்றை பற்றி எடுத்துரைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த அவர்களின் வரலாற்றை வருங்கால சங்கத்தினர் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சின்னத்தை பேணி காக்க வேண்டும் என்றனர். பொதுமக்கள் சின்னத்தை நேரில் சென்று பார்ப்பதற்கும், அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அந்த இடத்தில் அவர்களின் வரலாற்றை பலகையில் பொறிக்கப்பட்டு வைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்