மேலும் அறிய

நிதி நிறுவன ஊழியர்கள் டார்ச்சரால் வெல்டிங் பட்டறை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை

திருச்சியில் தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் நடுரோட்டில் தீக்குளித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் மரணம்.

திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் டார்ச்சரால் தீக்குளித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் சேகர் (58). காந்தி மார்க்கெட் தர்பார்மேடு மாரியம்மன் கோயில் அருகே வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் தில்லைநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பர்சனல் லோன்  7 லட்சம் பெற்றார். மாதம் 20,810 கட்டி வந்தார். கடந்தாண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கு கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வெல்டிங் பட்டறைக்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள், 2 மாதத்திற்கு கடன் தொகையை ஏன் கட்டவில்லை உடனே கட்ட வேண்டும் என கூறி சேகரை மிரட்டி உள்ளனர்.

அதற்கு அவர் தற்போது பணம் இல்லை, வேலையும் வரவில்லை என்பதால் தான் 2 மாதம் தவணை தொகையை கட்டவில்லை. வேறு எங்கேயாவது வாங்கி கட்டி விடுகிறேன் என கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் கடன் தொகையை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் சேகரை கடந்த சில தினங்களாக நேரில் சென்று தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்  மன உளைச்சலில் சேகர் இருந்து வந்துள்ளார். மேலும் இதனை ஏற்காத ஊழியர்கள், சேகரின் பைக் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

நிதி நிறுவன ஊழியர்கள் டார்ச்சரால் வெல்டிங் பட்டறை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை

இதையடுத்து மாலை தில்லைநகரில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் சென்ற சேகர், பணத்தை ஏற்பாடு செய்து கட்டி விடுகிறேன். பைக்கையும், செல்போனையும் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த சேகர், அங்கிருந்து புறப்பட்டு திருச்சி நீதிமன்றம்  அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு எதிர்புற சாலையில் சென்று நீதிமன்றத்தின்  புறவழி கேட் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடலில் தீப்பிடித்து அலறி அடித்து ஓடியதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் தீயை அணைத்து சேகரை மீட்டனர். கன்டோன்மென்ட் காவல்துறையினர்  சேகரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று  சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அமர்வு நீதிமன்ற காவல் துறையினர் வழக்குபதிந்து விசாரித்து  வருகின்றனர். இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள்  அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு  அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிதி நிறுவன ஊழியர்கள் டார்ச்சரால் வெல்டிங் பட்டறை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை

மேலும் உடல் முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது. பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது. கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் வேலை இல்லாமால் மிகவும் அவதிபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற பணத்தை திரும்பி சரியாக கட்ட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக வங்கியில் வாங்கின கடனையும் கட்டமுடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் இது போன்று மக்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை மன உலைச்சளுக்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ள சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆகையால் அந்த பைனான்ஸ் நிர்வனத்தின் மீது உடனடியாக நடவடக்கை எடுக்க வேண்டும். மேலும் இனுமேல் இது போன்ற சம்பங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget