(Source: ECI/ABP News/ABP Majha)
9 சட்டமன்ற தொகுதியில் 22,91,890 வாக்காளர்கள்! திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திருச்சி மாவட்டத்தில் 3,04,908 வாக்காளர்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும், 2,19,606 எண்ணிக்கையில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக லால்குடி தொகுதி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.01.2024 -ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 ரவீந்திரன் ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சுருக்கம் முறை திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 ஆம் தேதி , இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு :
சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண் ,பெண் வாக்காளர்கள் விபரம்:
1- 138- மணப்பாறை சட்டமன்றத் தொகுதி:
ஆண் வாக்காளர்கள் - 136691,பெண் வாக்காளர்கள் - 141486, பிற வாக்காளர்கள் - 13, மொத்தம் - 278190 வாக்காளர்கள் உள்ளனர்.
2- 139- ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி :
ஆண் வாக்காளர்கள் - 147549, பெண் வாக்காளர்கள் - 157312, பிற வாக்காளர்கள் - 47, மொத்தம் - 304908 வாக்காளர்கள் உள்ளனர்.
3- 140- திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி :
ஆண் வாக்காளர்கள் - 130640, பெண் வாக்காளர்கள் - 140984, பிற வாக்காளர்கள் - 33, மொத்தம் - 271657 வாக்காளர்கள் உள்ளனர்.
4- 141- திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி :
ஆண் வாக்காளர்கள் - 122720, பெண் வாக்காளர்கள் - 130817, பிற வாக்காளர்கள் - 63, மொத்தம் - 253600 வாக்காளர்கள் உள்ளனர்.
5- 142- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி:
ஆண் வாக்காளர்கள் - 131023, பெண் வாக்காளர்கள் - 136914, பிற வாக்காளர்கள் - 60 , மொத்தம் - 267997 வாக்காளர்கள் உள்ளனர்.
6-143- லால்குடி சட்டமன்ற தொகுதி :
ஆண் வாக்காளர்கள் - 106034, பெண் வாக்காளர்கள் - 113551, பிற வாக்காளர்கள் - 21, மொத்தம் - 219606 வாக்காளர்கள் உள்ளனர்.
7- 144- மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி:
ஆண் வாக்காளர்கள் - 121391, பெண் வாக்காளர்கள் - 130866, பிற வாக்காளர்கள் - 43, மொத்தம் - 252300 வாக்காளர்கள் உள்ளனர்.
8- 145- முசிறி சட்டமன்ற தொகுதி :
ஆண் வாக்காளர்கள் - 107797, பெண் வாக்காளர்கள் - 113241, பிற வாக்காளர்கள் - 22, மொத்தம் - 221060 வாக்காளர்கள் உள்ளனர்.
9 - 146- துறையூர் சட்டமன்றத் தொகுதி ( தனி) :
ஆண் வாக்காளர்கள் - 107728, பெண் வாக்காளர்கள் - 114814, பிற வாக்காளர்கள் - 30, மொத்தம் - 222572 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் விவரம் :
ஆண் வாக்காளர்கள் - 1111573, பெண் வாக்காளர்கள்- 1179985, பிற வாக்காளர்கள் - 332 , மொத்தம் - 2291890 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி 139- ஸ்ரீரங்கம், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதி 143- லால்குடி ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம்1062/1000 ( பெண்கள் / ஆண்கள்) . திருச்சி மாவட்டத்தில் 27.10.2023 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 2547 ஆகும். மேற்படி பட்டியலின்படி , சுருக்க முறை திருத்தங்களின் போது வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக 50,749 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி பட்டியலின்படி சுருக்கமுறை திருத்தங்களின் போது வாக்காளர் பட்டியலில் இறந்த மற்றும் நிரந்தரமாக குடி பெயர்ந்து உள்ள நபர்களுடைய பெயர்கள் படிவம் -7 பெற்ற பின்னர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கல் பணியின் போது சுருக்கு முறை திருத்தங்கள் பணி மேற்கொண்டு மொத்தம் 22028 போயிட்டு பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5.1.2023 முதல் நாளது தேதி வரை திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 49761 புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வரப்பெற்று கணினியில் விபரங்களை பதிவேற்றம் செய்து அஞ்சல் துறை மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு முன்பாக வரப்பெறும் விண்ணப்பங்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் துறை மூலம் வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் 10 ஜனங்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்திட விண்ணப்பம் செய்யலாம். மேலும் பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் கடைசி நாளிலிருந்து 10 நாளுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர்கள் அளிக்கலாம். எனவே வாக்காளர் பட்டியலில் ஈடுபட்ட இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்களை அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம்/ இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் வரும் 31.01.2024 தேதிக்குள் விண்ணப்பம் அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.