மேலும் அறிய

கபட நாடகமாடி தவழ்ந்து தவழ்ந்து பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி - வெல்லமண்டி நடராஜன்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி. பழனிசாமி டெபாசிட் கூட வாங்க மாட்டார் - முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் தெய்வீக ஆசியோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி விஎஸ்எம் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம கலந்து கொண்டார். 

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியது.. 

அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக திருச்சி மாவட்டத்தில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கழகத்தை மீட்டெடுப்பதற்காக. நமது ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சாதாரண தொண்டர்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் தான் இயக்கத்தை காப்பாற்றும். இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கு சாதாரண தொண்டனால் மட்டுமே முடியும். இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டன் நினைத்தால் முதல்வராகலாம், சட்டமன்றம், நாடாளுமன்றம், அமைச்சர் ஆகலாம். 

திராவிட கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. அண்ணா அவர்கள் என்ன கொள்கையை வகுத்தாரோ அது தடம் புரண்டதால், எம்.ஜி.ஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். திராவிட கழகத்தின் கொள்கையை பின்பற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றிய பெருமை எம்.ஜி.ஆர் அவர்களையே சேரும். 

தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இயக்கம் பிளவு பட்டது. அப்போதும் இயக்கத்தில் பிரச்சனைகள் வந்தது. ஆனால் இந்த அளவிற்கு ஒருவர் ஒருவரை வீழ்த்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அளிக்க வேண்டும் என்று சர்வதிகார போக்கோடு எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். இதுபோல் எந்த தலைவர்களும் செயல்படவில்லை.

எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவிற்குப் பிறகு, இயக்கத்தை காப்பாற்ற வேண்டும், வளர்க்க வேண்டும், என்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இந்த கழகத்தை முன்னெடுத்து சென்றுள்ளனர். ஜானகி அம்மையார் அவர்கள் கழகத்தை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் வளர்க்க முடியும் என்று ஆட்சி அறையனையில் ஜெயலலிதா அம்மையாரை ஏற்றினார். கழகத்தை முழுமையாக ஜெயலலிதா அவர்களிடம் ஒப்படைத்தார் ஜானகி. 

கபட நாடகமாடி தவழ்ந்து தவழ்ந்து பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி -  வெல்லமண்டி நடராஜன்

புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே பலமுறை எனக்குப் பிறகு இயக்கத்தையும், ஆட்சியையும் வழிநடத்தும் தகுதி உடையவர் ஓபிஎஸ் என்று பலமுறை கூறியிருக்கிறார். குறிப்பாக இரண்டு முறை முதலமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள். 

புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது, அவர்களின் நிழலாக இருந்தால் சசிகலா அவர்களை நன்கு கவனித்துக் கொண்டார். அப்போது சசிகலா அவர்களே ஓபிஎஸ் அவர்களை அழைத்து நீ தான் பொறுப்பு முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார். தவழ்ந்து தவழ்ந்து காலை நக்காமல் நக்கி பதவிக்கு வந்தார். 

அதிமுகவை பொருத்தவரை முதலில் பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுப்பார்கள். அதன் பிறகு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கபட நாடக மாடி ஓபிஎஸ் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று நோக்கத்தோடு, பகுதி, வட்டம் வாரியாக நிர்வாகிகள் சேர்ந்தது, இறுதியாக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்பு ஓபிஎஸ் அவர்களை வெளியேற்றினார். 

மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் குரூப் குரூப்பாக பிரிந்து இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று முழக்கங்கள்யிட்டனர் அந்நேரத்தில் ஒரு சிலர் தகாத வார்த்தையும் பேசினார்கள்.  இது போன்ற திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி நாடகத்தை அரங்கேற்றி பொதுச்செயலாளர் பதவியை பெற்றுக் கொண்டார். அதேபோல் பொதுக்குழுவில் எல்லா ரவுடிகளும் ஒன்றாக அமர்ந்திருந்தனர் என குற்றம் சாட்டினார். 

2500 ரவுடிகளை பொதுக்குழுவில் அமர வைத்து பாட்டில் வீசினார்கள், முழக்கங்கள் இட்டனர். திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கயவன் கூட அன்றைய தினம் தண்ணீர் பாட்டில் வீசக்கூடிய ஒரு நிலைமை இருந்தது. 

ஓபிஎஸ் அவர்களால் இயக்கத்திற்கு வந்து பதவிகளைப் பெற்றவர்கள் கூட அவரை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவரை இந்த இயக்கம் பணத்தை வைத்தோ ஜாதியை வைத்தோ தேர்தலை சந்திக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இவை இரண்டையும் வைத்து தான் அரசியல் செய்கிறார். அதனால்தான் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. 

கபட நாடகமாடி தவழ்ந்து தவழ்ந்து பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி -  வெல்லமண்டி நடராஜன்

ஒரு தேர்தலிலும் முழுமையாக வெற்றி பெறாத ஒருவர் எதற்காக பொதுச் செயலாளராக இருக்க வேண்டும். எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பற்றி பேச எந்த யோக்கியத்தையும் ,எந்த ஒரு தகுதியும் இல்லாதவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் 2500 ரவுடிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், தங்கமணி, வேலுமணி, வைரமணி உள்ளிட்ட பேர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு இந்த இயக்கத்தை குட்டிச்சுவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் சார் அணி, சசிகலா அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, என பிரிந்துள்ளது. இவற்றை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்து வருகிறார். ஒற்றுமையாக இருந்தால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று மிக்க சாதனையை படைக்கலாம் என அன்போடு ஓபிஎஸ் அவர்கள் அழைக்கிறார். 

எடப்பாடிக்கு அறிவே இல்லை, தவழ்ந்து தவழ்ந்து பதவி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. பதவி கொடுத்த அவர்களையெ சூரியனைப் பார்த்து கொலைப்பது போல் கொலைத்துக் கொண்டிருக்கிறார். 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி டெபாசிட் இழப்பார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தை இன்னும் நூறாண்டு காலம் காப்பாற்ற ஒன்றிணைந்து உழைப்போம் இயக்கத்தை மீட்போம் தேர்தலை வெற்றியுடன் சந்திப்போம் என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget