மேலும் அறிய

ஆங்கிலேயர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு வெளியே சென்றாலும் அவர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருந்து கொண்டு தான் உள்ளது என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

பாரதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாகவும், ராமலிங்க வள்ளலாரின் 200-வது ஜெயந்தி, சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு நிறைவு ஆகியவை முப்பெரும் விழாவாக திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 'இந்திய விடுதலைப்போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. தொடக்க விழாவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கேரள மாநிலம் காசர்கோடு மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் என்.அஜீத்குமார், இந்திய விடுதலை போராட்டத்தில் மலையாள மொழியின் பங்களிப்பு குறித்தும், கர்நாடக மாநில அரசு முதல்நிலை கல்லூரி பேராசிரியர் அஜகலாகிரீஷ் இந்திய விடுதலை போராட்டத்தில் கன்னட மொழியின் பங்களிப்பு குறித்தும் பேசினர். பின்னர், ஆந்திர மாநிலம் இந்து கல்லூரி கமிட்டி துணைத்தலைவர் சிங்கம் வெங்கட் லட்சுமிநாராயணா இந்திய விடுதலை போராட்டத்தில் தெலுங்கு மொழியின் பங்களிப்பு குறித்தும், சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பு குறித்தும் பேசினர். அப்போது அவர்கள், விடுதலை போராட்டத்தில் தென்னிந்திய மொழியின் இலக்கிய ஆளுமைகள் நாட்டுப்பற்றையும், சுதந்திர உணர்ச்சியையும் தங்களது படைப்புகளில் எவ்வாறு மிளிரச்செய்துள்ளனர் என்பது குறித்து எடுத்துரைத்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதனை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், “சுதந்திர போராட்டத்தின் போது தென்னிந்திய மொழிகளின் பங்கு என்கிற தலைப்பில் விவாதம் கண்டிப்பாக தேவையான ஒன்று. நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் மக்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில மொழிகளில் மக்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வது மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின்போது இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே போராடியதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே அதை சொந்தம் கொண்டாட முடியாது. அனைவருமே போராடினார்கள் என்பதே உண்மை. நம் கிராமங்களில் பக்கத்து தெருவில் கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இருந்திருக்கலாம். அதனை ஆய்வு செய்யும் மாணவர்கள் தேடி கண்டறிய வேண்டும். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு வெளியே சென்றாலும் அவர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருந்து கொண்டு தான் உள்ளது. 

ஆங்கிலேயர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும் 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நேரத்தில் நாடுமுழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. மகாத்மா காந்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் கவலையில் இருந்தார். அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு 'ஆங்கிலேயர்கள் தான் இங்கிருந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற பிளவுபடுத்தும் சிந்தனைகள் மாற பல ஆண்டுகள் ஆகும். அதை நினைத்து தான் கவலைப்படுவதாக கூறினார். நம் மக்களின் அடையாளத்தை, கலாசாரத்தை ஆங்கிலேய அரசாங்கம் முழுவதுமாக அழிக்க நினைத்தனர். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளனரா என்றால் கண்டிப்பாக இல்லை. தமிழகத்தில் நான் சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலை பார்த்தபோது 30 பேரை கூட நான் அதில் பார்க்கவில்லை. ஆனால் பாளையங்கோட்டை மற்றும் வேலூரில் நடந்த போராட்டங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது உயிரை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் சுதந்திரத்திற்காக தங்களின் பங்களிப்பை மட்டும் அல்ல தங்களிடம் இருந்த பலவற்றை கொடுத்துள்ளனர். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் போராடிய அனைவரையும் நாம் முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget