மேலும் அறிய

தமிழ்நாடு மக்களுக்கு 511 வடையை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது - அண்ணாமலை விமர்சனம்

கோவில்களுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாசகங்களோடு இருக்கும் சிலையை உடைக்கமாட்டோம். அதை வேறு ஒரு பொது இடத்தில் வைப்போம் - அண்ணாமலை பேச்சு.

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில்  என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொண்டார். மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் நாச்சியார் கோவில் அருகே நடைபயணத்தை தொடங்கிய அவர் சாலை ரோடு, கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேல புலிவார் ரோடு, மரக்கடை பகுதிகள் வழியே காந்தி மார்கெட்டில் நிறைவு செய்தார். காந்தி மார்கெட்டில் உரையாற்றியபோது பேசியதாவது: கடுமையான உழைக்கும் மக்களுக்கு வெகுமதி கொடுப்பது இந்தியர்களின் பழக்கம். மேலும், 2014 ல் மோடி பிரதமராக ஆன போது பெரிய மாற்றத்தை விரும்பி மக்கள் பா.ஜ.க வை தேர்ந்தெடுத்தார்கள். பொதுவாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது. ஆனால் 2014 ல் மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆட்சியார்கள் மக்களின்  எதிர்ப்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்ய மாட்டார்கள். ஆனால் மோடி எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் தாண்டி செயல்பட்டார் அதன் காரணமாக 2019 ல் வெற்றி பெற்றார். அதே போல 2024 ல் 400 எம்.பிக்களோடு பிரதமராவார். கடந்த 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வின் வளர்ச்சி  2  சதவீதம் தான். பா.ஜ.க ஆட்சி அமைந்த பின் 9 ஆண்டுகளில் தன் சொந்த காலில் நிற்க கூடிய, உலக நாடுகளுக்கு உதவ கூடிய நாடாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில்9 ஆண்டுகளில் 11 வது இடத்திலிருந்த இந்தியா 5 வது இடத்திற்கு வந்துள்ளது. அதேபோல் 2027 ல் மூன்றாவது பெரிய நாடாக உயர போகிறது. 2047 முடியும் போது உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும். 

ஊழல் இல்லாத, நாட்டுக்காக உழைக்கும் மனிதன் ஆட்சி பீடத்தில் அமரும் போது அது நடக்கும். நம் ஆட்சிக்கு நேர் எதிரான ஆட்சி தான் திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து ஊழல் செய்து வருகிறார்கள். இது போன்ற ஆட்சியை தமிழ்நாட்டின் வரலாற்றில்  பார்த்ததில்லை என்றார்.குறிப்பாக  மகனுக்கும் மருமகனுக்குமான ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருக்கிறது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு ஏழை மக்களின் கண்ணீர் தெரியும் அவர்களுக்காவே உழைத்தார்கள்.

தமிழ்நாடு மக்களுக்கு 511 வடையை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது - அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும்  ஒரே தகுதி கருணாநிதியின் மகன் என்பது மட்டும் தான். அதே போல உதயநிதி க்கு ஸ்டாலினின் மகன் என்கிற தகுதி தான்.ஏழை தாயின் மகன் என மோடி கூறியது போல் வேறு எந்த ஆட்சியாளர்களும் கூற முடியுமா?தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா? வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா? தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 3,50,000 பேருக்கு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அது குறித்து கேட்டால் பிரதமர் இந்தியை திணிக்கிறார் என சம்மதம் இல்லாமல் பேசுகிறார்கள். கும்மிடிப்பூண்டியை தாண்டி தமிழ் மொழியை செல்லாமல் வைத்திருந்தது தான் தி.மு.க. ஆனால் இன்று பிரதமர் மோடி ஐ.நா சபை வரை தமிழ் மொழியை கொண்டு சென்றுள்ளார். புதிய பாராளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய சின்னமான செங்கோலை பிரதமர் வைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையில் 5 ஆம்  வகுப்பு வரை தாய் மொழி தான் பயிற்று மொழி என கூறப்பட்டுள்ளது. இனி பிரதமர் தமிழ் மொழியை இந்தியா மேல் திணிக்கிறார் என தி.மு.க வினர் குற்றச்சாட்டு வையுங்கள்.தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு பிடித்த நான்கு ஐந்து தலைவர்களுக்கு மட்டும் போஸ்டர் ஒட்டி சிலை வைத்துள்ளார்கள்.வ.வே.சு ஐயருக்கு திருச்சில் சிலை இல்லை.

இந்தி கட்டாய மொழி ஆக்கப்படும் போது அதற்கு போராடியவர் கி.ஆ.பெ அவர்கள்.கி.ஆ.பெ தன் கடைசி காலத்தில் தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என கூறியுள்ளார்.1967 க்கு பிறகு நான்கு தலைவர்கள் பெயர் தான் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை அசிங்கப்படுத்தி வைத்துள்ளது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாக இருக்கிறது.திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனத்திற்காக ராஜ ராஜ சோழன் வெட்டினார். இன்று அது கழிவு வாய்க்காலாக மாறியுள்ளது.

தமிழ்நாடு மக்களுக்கு 511 வடையை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது - அண்ணாமலை விமர்சனம்

மக்களுக்கு கொடுத்த 511 வாக்குறுதிகளில் 20 கூட திமுக நிறைவேற்றவில்லை.பா.ஜ.க ஆட்சிக்கு வரும் பொழுது கோவிலுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாக்கியங்கள் இருக்க கூடிய பலகை இருக்காது என ஸ்ரீரங்கத்தில் பேசினேன். நம்முடைய அரசியல் வளர்ச்சி அரசியல், ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அரசியல், எல்லா மதமும் சம்மதம் என்கிற அரசியல்.கோவிலுக்கு செல்லும் போது எல்லா மனிதர்களும் கோவிலுக்கு அழைத்து சென்றவர்கள் சிலை வைக்கப்படும். மதுரையில் முத்துராமலிங்க தேவர், வைத்தியநாத ஐயர் ஆகியோர் சிலை கோவில்களுக்கு வெளியே வைக்கப்படும். கோவில்களுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாக்கியங்கள் அடங்கிய சிலை பொது இடத்தில் வைக்கப்படும். சிலையை உடைக்க மாட்டோம். மனிதர்களை முன்னிலைப்படுத்தி தான் பா.ஜ.க ஆட்சி இருக்கும்.

திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி இருவரும் சண்டையிட்டு கொண்டிருக்கார்கள். இருவரும் திருச்சி முன்னேற கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.மகேஷ் பொய்யாமொழி 90% உதயநிதியுடன் இருக்கிறார். 10 சதவீதம் சினிமா நிகழ்ச்சிகளில் இருக்கிறார். தமிழகத்தில் 11,711 வகுப்பறைகள் குறைவாக இருப்பதாக 2022 ல் சி.ஏ.ஜி அறிக்கை கூறி உள்ளது. அந்த குழந்தைகள் மரத்தடியில், மேற்கூரை இல்லாத இடங்கள், ஆய்வகத்தில் அமர்ந்து படிக்கிறார்கள்.18,862 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அடுத்த கட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் தோற்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மக்களுக்கு 511 வடையை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது - அண்ணாமலை விமர்சனம்

தி.மு.க அமைச்சர்களுக்கு கல்வி அறிவே கிடையாது. அவர்கள் குழந்தைகளிடம் சென்று நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்குகிறார்கள்.இதையெல்லாம் மகேஷ் பார்ப்பதில்லை. அதே போல அமைச்சர் கே.என்.நேரு மார்கெட்டையும், பேருந்து நிலையத்தையும் திருச்சி மாநகரின் வெளியே கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார்.மாவட்டத்தின் வளர்ச்சியை கெடுப்பது தான் கே.என்.நேரு வின் சாதனை.மழை நீர் வடிகால் பணியை செய்யாமல் இருக்கிறார்.திருச்சியில் ஜப்தி நடவடிக்கைக்காக சென்ற மண்டல துணை வட்டாட்சியரை கே.என்.நேரு வின் வலது கரமான காஜமலை விஜய் மற்றும் 15 பேரை சென்று அடித்தார்கள். பா.ஜ.க போராட்டத்தை அறிவித்த பின் வழக்கு பதிவு செய்தார்கள்.உதயநிதி ஸ்டாலின் முட்டை மந்திரவாதி போல் நீட்டை ஒழிக்க வேண்டும் என சுற்றி வருகிறார்.

திருச்சியில் தி.மு.க ஆட்சி அமைந்தால் ஆட்டோ நகரம், பிற நகரம், மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி, உயர்மட்ட பாலம், மெட்ரோ திட்டம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என கூறினார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. 511 வடையை கொடுத்து விட்டு ஆட்சியில் ஸ்டாலின் அமர்ந்துள்ளார் என்றார்.மேலும் 2024 மற்றும் 2026 ல் மக்கள் பா.ஜ.க விற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.