கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையா? - மாவட்டவாரியாக உதவி மையங்கள் அமைப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் வாரியாக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் இ மெயில் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மக்கள் தயங்காமல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. மேலும் பரிசோதனை சான்றிதழ் பெறும் போது சரியான தகவல் இல்லை எனவும், எழுத்துபிழை போன்ற குறைகள் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரியாக இருந்தால் மட்டுமே விமானம், இரயிலில் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. சான்றிதழ் முறையாக கிடைக்காததால் பலரும் பயணம் செய்ய சிரமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சிலருக்கு பரிசோதனையில் தவறாக ரிசல்ட் வருவதாக புகார்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன ஆகையால் தமிழக பொது சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்க்கொண்டு விரைவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசு தெரிவித்து இருந்தது. இதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் வாரியாக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் இ மெயில் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி 4 முதல் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 4 ஆம் தேதி 6 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது. தமிழகத்தில் தற்போது வரை 3 கோடியே 41 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பலருக்கு முறையாக சான்றிதழ் கிடைக்காத நிலை உள்ளது. பலரின் தடுப்பூசி சான்றிதழில் பெயர் உள்ளிட்ட தகவல்களில் பிழை உள்ளது. இதை சரி செய்யும் விதமாக மாவட்ட வாரியாக உதவி மையங்களை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இதன்படி தமிழகத்தின் அனைத்த மாவட்டங்களிலும் உதவி மையம் அனைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்கனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 நிலையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொபைல் என்று இ-மெயில் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய சான்றிதழில் திருத்தம் செய்தல், பாஸ்போர்ட் தகவல்களை இணைத்தல் உள்ளிட்ட குறைகளுக்கு தீர்வு காணப்படும்.
இதன்படி பொதுமக்கள் தங்களில் கோரிக்கை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை சம்பந்தபட்ட மாவட்டங்களில் முதல் நிலை அதிகாரிக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் பொதுமக்கள் உதவி செய்வார்கள். பெரும்பாலும் 7 நாட்களில் குறைகளுக்கு தீர்வு காணப்படும். அவ்வாறு தீர்வு காணப்படவில்லை என்றால் மாநில அளவிலான அதிகாரிகளை தொடர்வு கொள்ளலாம். இதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்கு dphatg@nic.in, அரியலூர் சுகாதார மாவட்டத்திற்கு ddh.tnari@nic.in, கரூர் சுகாதார மாவட்டத்திற்கு dphkar@nic.in, மயிலாடுதுறை சுகாதார மாவட்டத்திற்கு dhsmyld@gmail.com, நாகை சுகாதார மாவட்டத்திற்கு dphngp@nic.in, பெரம்பலூர் சுகாதார மாவட்டத்திற்கு dphpmb@nic.in, புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்திற்கு dphpdk@nic.in, தஞ்சாவூர் சுகாதார மாவட்டத்திற்கு dphtnj@nic.in, திருச்சி சுகாதார மாவட்டத்திற்கு dphtry@nic.in, திருவாரூர் சுகாதார மாவட்டத்திற்கு dphtvr@nic.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.