ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா? - டென்ஷனான கரூர் ஆட்சியர்
’’பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் தங்களுக்கு யார் வழங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி விடுமுறை குறித்து எழுதிய கடிதம் இருந்தால் என்னிடம் காட்டுங்கள்’’
![ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா? - டென்ஷனான கரூர் ஆட்சியர் Corona vulnerability to teacher at school in Karur - District Collector's surprise inspection ஆட்சியர் உத்தரவு இல்லாமல் அரசு பள்ளிக்கு விடுமுறையா? - டென்ஷனான கரூர் ஆட்சியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/08/ae7c940b48eedf9501f40dfa65115403_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தை அடுத்த பொரணி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உயிரியல் முதுநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆதிலோகநாயகி. இவருக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு இருந்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு வந்து சென்ற நிலையில் அன்று மாலையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளார்.
அதன் பிறகு அந்த ஆசிரியை பள்ளிக்கு சனிக்கிழமை வராததால் அவரை தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி வளாகம் முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆசிரியை வெள்ளியணையில் உள்ள அவரது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 12ம் வகுப்பு வரை 280 மாணவ, மாணவிகள், 18 ஆசிரிய ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயிரியல் பாடத்தினை ஆதிலோகநாயகி எடுத்து வந்துள்ளார்.
இன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தொற்று பாதித்த ஆசிரியர் பணியாற்றிய பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்தபோது அங்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரியாமல் பள்ளியின் தலைமை பொறுப்பாசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுமதி வாங்கியது பள்ளிக்கு விடுமுறை அளித்திருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இந்த தகவலால் டென்சனாக மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் தங்களுக்கு யார் வழங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி விடுமுறை குறித்து எழுதிய கடிதம் இருந்தால் என்னிடம் காட்டுங்கள் என்று காரசாரமாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் வாய்மொழி உத்தரவை அவர் கூறியதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிலளித்தார். பதிலை கேட்ட பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. குறிப்பாக ஒரு பள்ளியில் மூன்று முதல் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று பாதித்தால் மட்டுமே சுகாதாரத் துறையின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் அதன்படி சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார் .
பின்னர் பள்ளிக்கு ஆசிரியர்கள் எத்தனை பேர் வந்துள்ளன என்று கேட்டிருந்தார். அதில் 5 ஆசிரியருக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை என கூறினார். எந்த அடிப்படையில் விடுமுறை எடுத்துள்ளனர் என கேட்டார். அதற்கு அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளதாக கூறினார். பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெளுத்து வாங்கிய பின்பு விளக்கமளிக்க அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)