மேலும் அறிய

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் முடிவு நிறுத்தம்: அமைச்சர் நேரு

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தை பெறுவதற்காக, கடந்த, எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு  ஆய்வு செய்தார். அவருடன், ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி, சேலம் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே என் நேரு கூறியது.. திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும் என  அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். மேலும் எங்களுடைய முயற்சியால் பத்தாண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பாலம் பணி இன்னும் 3 மாதத்தில் முடிவு பெறும். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயரப் போகிறது என்பது குறித்த கேள்விக்கு?? தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த அமைச்சர் இருக்கிறார் இது தொடர்பாக முடிவு செய்து உங்களிடம் அறிவிப்பார்கள் எந்த கட்டணம் உயர போகிறது என்று எனக்கு தெரியாது என்றார். 

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் முடிவு நிறுத்தம்: அமைச்சர் நேரு

மேலும் சென்னையில் வரி உயர்த்தி, 22 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற ஊர்களில், 13 ஆண்டுகள் ஆகின்றன. 1998 நாங்கள் இயற்றிய சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால், அந்த சட்டத்தை ஆந்திரா எடுத்துச் சென்று அமல்படுத்திவிட்டது. அதன்பிறகு, 2008 ஆண்டு இயற்றிய சட்டத்தை அதிமுக தேர்தலுக்காக கிடப்பில் போட்டுவிட்டனர். ஒட்டுமொத்தமாக, 10 ஆண்டுகளுக்கான வரியை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் ஆண்டுக்கொரு முறை வரி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். இதனால் தொடர்ந்து ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளோம். குறிப்பாக ஆண்டுதோறும் வரி உயர்வு, மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்வதற்காக இல்லை. நகர்ப்புற அமைப்புகள் நிதிவளம் பெற்று, தன்னிச்சையாக செயல்பட இந்த சட்டம் உதவும் என்றார்.

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் முடிவு நிறுத்தம்: அமைச்சர் நேரு

தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி, அரசு அதிகாரிகளை தடுத்தால் அவர் மீது வழக்குப் பாயும் என்றார். மேலும்  திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலைய நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கி விட்டனர். திருச்சி விமான விரிவாக்கத்திற்காக, எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் வேண்டுமானால், அதை அந்த தனியாரே கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget