மேலும் அறிய

திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடி ஒதுக்கீடு

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்க திட்டம்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டதால் கொள்ளிடம் ஆற்றிலுள்ள புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடியில் தடுப்புச்சுவர், கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி திருவானைக்காவல்- நம்பர் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்ததால், அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு 14.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கொள்ளிடம் ஆற்றிலுள்ள பழைய பாலத்தின் 18,19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் குறைந்தவுடன் சென்னை ஐஐடி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக் கொண்ட வல்லுநர் குழுவினர் கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று பாலங்களை ஆய்வு செய்தபோது, பழைய பாலம் உடைபட்டதன் காரணமாக புதிய பாலத்தில் 17, 18, 19, 20, 21 ஆகிய தூண்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மேல் மண் அரிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடி ஒதுக்கீடு

மேலும் இதனால், புதிய பாலத்தின் அடித்தளம் வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டதால், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து பாலத்தின் அடிப்பகுதியை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதனடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள தற்போது ரூ.6.28 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கொள்ளிடம் ஆற்றிலுள்ள புதிய பாலத்தின் கீழ்பகுதியில் கடந்த 2018-ல் ஏற்பட்ட மண்அரிப்பின் ஆழம் தற்போதைய நீரோட்டத்தின் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அடுத்தடுத்து பெருவெள்ளம் வரக்கூடிய சமயங்களில் புதிய பாலத்தின் கட்டுமானத்துக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய பாலத்தின் அடிப்பகுதி முழுவதையும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடி ஒதுக்கீடு

முதற்கட்டமாக 17 முதல் 21 வரையிலான தூண்கள் மற்றும் அதற்கு முன்னும், பின்னும் சில மீட்டர் தூரங்கள் என சுமார் 300 மீ நீளத்துக்கு தற்போது அடித்தளம் பலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பாலத்தின் அடியில் மண் அரிப்பு அதிகமுள்ள இடங்களில், தூண்களுக்கு பக்கவாட்டில் 6.5 மீ ஆழத்துக்கும், மற்ற இடங்களில் சுமார் 3 மீட்டர் ஆழத்துக்கும் பள்ளம்தோண்டப்பட்டு தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துவிட்டது. ஒப்பந்ததாரரை தேர்வுசெய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இப்பணிகள் தொடங்கும் என்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget