திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிகட்டு - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 34 பேருக்கு காயம்
திருச்சி அருகே கூத்தைப்பார் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் 34 பேர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் முனியாண்டர் கோவிலில் திருவிழா கொண்டாடப்படும். திருவிழாவின் போது சிவன்ராத்திரி அன்று ஜல்லிக்கட்டு போட்டியானது வெகுவிமர்சையாக நடைபெறும். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு இருப்பதால் நேற்று அதற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 215 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியானது வெகுவிமர்சையாக நடைபெற்றது. காளையர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு காளைகளை அடக்க வீரர்கள் முற்பட்டுள்ளனர். முதல் சுற்றில் வீரர்கள் 75 பேர் களத்தில் இறங்கினர். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த ஜல்லிக்கட்டை காண வந்து இருந்தனர்.
குறிப்பாக முதல் 10 நபர்களுக்கு தங்க நாணயங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக பரிசையும் வழங்கினார். காவல்துறையினர் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்த பிறகு வீரர்களை களத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கபட்டது.. தொடர்ந்து போட்டியானது மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மொத்தம் 750 காளைகள் பங்கேற்கும் என்று விழா கமிட்டி தெரிவித்தது. அதேபோல் 215 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்சுற்றில் 75 பேர் களத்தில் இறங்கினார்கள். மேலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் 3ஆவது ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும்.
மேலும் வாடிவாசலில் இருந்து முதலாவதாக முனி ஆண்டவர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது வாடிவாசல் வழியே ஆக்ரோசமாக களமிறங்கிய காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று பல காளைகள் வேடிக்கை காட்டியது. இதில் மாடுகள் பாய்ந்ததில் வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்தனர். இதில் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு பாரம்பரியமான வேஷ்டி ,துண்டு, தங்க நாணயம், உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது ஜல்லிக்கட்டு போட்டியை 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.