இன்றைய தலைப்புச் செய்திகள் - 31.03.2021
வின்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இளம் சூழலியலாளர் கிரெட்டா துன்பர்க்கிற்கு முழுஉருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது
மாணவர்கள் அனைவரும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழில் கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - புதுவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோதி.
கோதாவரி மற்றும் காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. - தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துக்களை சுரண்டிவிடுவார்கள் - தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்.
திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று பிரதமர் மோதி குற்றச்சாட்டு. அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் பிரதமருக்கு தெரியாதா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி.
நோட்டாவிற்கு ஓட்டு போட்டால், சமைத்துவிட்டு உண்ணாததற்கு சமம். வாக்குகளை வீணடிக்காதீர் - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
ஊழலின் அபாயத்தை உணராமல் மக்கள் அதனை கடந்து செல்கின்றனர் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.
மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டுக்கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது - பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு.
பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவு - இன்றைக்குள் இணைக்காதபட்சத்தில் 1000 ரூபாய் அபராதம் என்று அறிவிப்பு.
பிரிட்டன் நாட்டில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இளம் சூழலியலாளர் கிரெட்டா துன்பர்க்கிற்கு முழுஉருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் டி 20 தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிப்பு. காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர்-க்கு ஓய்வு.