மேலும் அறிய

திருவாரூர்: டாஸ்மாக் கடைகளில் கமிஷன் - திமுகவினர் அட்டூழியம்? - ஊழியர்கள் குற்றச்சாட்டு!

திருவாரூர் அருகே உள்ள டாஸ்மாக் மாநில வாணிப கழகம் அலுவலகம் முன்பாக டாஸ்மாக் ஊழியர்கள், கமிஷன் கேட்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் திமுகவினர் கமிஷன் கேட்பதாக கூறி டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 108 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மார்க் கடையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் தொகையில் ஒரு சதவீதம் தொகையை கமிஷனாக வழங்கவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பி.டி அரசக்குமாரின் சகோதரர் எனக் கூறி டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கமிஷன் கேட்பதாக புகார் தெரிவித்து இன்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாநில வாணிப கழகம் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கமிஷன் கேட்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேரணியாகச் சென்று டாஸ்மாக் மேலாளர் அவர்களை சந்தித்து டாஸ்மாக் ஊழியர்கள் புகார் மனு அளித்தனர். இதில் டாஸ்மார்க் ஊழியர்களிடம் கமிஷன் கேட்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

திருவாரூர்: டாஸ்மாக் கடைகளில் கமிஷன் - திமுகவினர் அட்டூழியம்? - ஊழியர்கள் குற்றச்சாட்டு!
அதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்களிடம் மேலாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் டாஸ்மார்க் ஊழியர்களிடம் கமிஷன் கேட்கும் நபர்கள் மீது டாஸ்மாக் மேலாளர் தலைமையில் ஊழியர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து புகார் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.அதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், “டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்கனவே பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரக் கூடிய சூழ்நிலையில் என்று ஆளும் கட்சி தரப்பில் இருந்து கமிஷன் கேட்பது என்பது மிகுந்த வேதனைக்குரியது.இதை டாஸ்மாக் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகரின் தம்பி என்று கூறிக்கொண்டு சிலர் மருந்து கடைகளில் ஒரு சங்கீதம் கமிஷன் கேட்டு எங்களை வற்புறுத்துகின்றனர். என் மூலம் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம் என்றும், இதுகுறித்து மண்டல மேலாளரிடம் புகார் மேலாளரிடம் அளித்துள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து எடுத்து இந்த போராட்டத்தை கைவிடுவோம்” என்று கூறினர்.

திருவாரூர்: டாஸ்மாக் கடைகளில் கமிஷன் - திமுகவினர் அட்டூழியம்? - ஊழியர்கள் குற்றச்சாட்டு!
இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தமிழ்நாடு டாஸ்மாரக் வாணிபக் கழக அலுவலகம் முன்பாக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?
Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?
மார்பிங் புகார்: பாஜக முருகானந்தம் முன்ஜாமீன் மனு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மார்பிங் புகார்: பாஜக முருகானந்தம் முன்ஜாமீன் மனு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget