மேலும் அறிய

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

கழிவறை நகராட்சியால் உரிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த இலவச கழிவறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

திருவாரூரில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம் போதிய  இடவசதி இன்றியும் நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் நிலையில் இருந்த காரணத்தினால் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு திருவாரூர் விளமல் அருகே தியாகபெருமாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால் 8 ஆண்டுகள் கழித்து இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்தின் முகப்பு நுழைவாயில் பேருந்துகள் உள்ளே வருவதற்கும் வெளியே சென்று முக்கிய சாலையை அடைவதற்குமுள்ள வழியானது கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனையடுத்து சேதமடைந்த சாலைகளை ஜல்லி சிமெண்ட் கலவையை கொட்டி அப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெய்த பருவமழையின் காரணமாக மீண்டும் சாலைகளில் பல இடங்களில் குண்டு, குழியுமானது. இதனால் பேருந்துகள் பேருந்து நிலைத்திற்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே இடறி விழும் அளவிற்கு பள்ளங்கள் இருந்து வருகிறது.

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

இந்த புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகராட்சி சார்பில் இலவச கழிவறை கட்டித் தரப்பட்டது. ஆனால் இந்த கழிவறை நகராட்சியால் உரிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த இலவச கழிவறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அதில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இலவச கழிவறை அசுத்தமாக இருக்கும் காரணத்தினால் தனியார் கழிவறைக்கு பயணிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக ஒப்பந்தம் எடுத்துள்ள நபர்கள் கழிவறைக்கான கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோன்று புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பகத்தை ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் புதியபேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று எழுதி மட்டுமே இருக்கிறது அதில் இருக்கிற இரண்டு பைப்பிலும் தண்ணீர் வருவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பேருந்துகள் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கான எவ்வித வசதியும் இல்லாததால் கால் தடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது.

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பேருந்து நிலையம் மது பிரியர்களின் கூடாரமாகவும் தனிமையை விரும்பும் காதலர்களின் புகலிடமாகவும் இருப்பதாகவும் மேலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பேருந்து நிலையம் இருப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இது போன்ற நிலை உள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தருவதுடன் வெளியூரிலிருந்து வரும் பயனிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே திருவாரூர் நகர பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: செல்ஃபி.. விதவிதமாக போஸ்.. கட்டியணைத்த வீரர்.. பதக்க விழாவில் CM விஜய்யின் க்யூட் மொமண்ட்!
CM Vijay: செல்ஃபி.. விதவிதமாக போஸ்.. கட்டியணைத்த வீரர்.. பதக்க விழாவில் CM விஜய்யின் க்யூட் மொமண்ட்!
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
ABP Nadu Top 10, 8 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 8 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget