கார்த்திகை தீபம் 2025: திருவண்ணாமலை போக்குவரத்து மாற்றம்! இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Karthigai Deepam 2025: "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, டிசம்பர் 5ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது"

Karthigai Deepam Festival 2025: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 02 தேதி முதல், டிசம்பர் 05 தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது
போக்குவரத்துக்கு தடை
கார்த்தீகை தீபத்திருவிழா முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இருசக்கர வாகனங்கள் மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் அனுமதிக்கபட மாட்டாது. மாடவீதியில் உள்ள வீடு மற்றும் கடை உரிமையாளர்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வீட்டிற்குள்ளே நிறுத்திக்கொள்ளவேண்டும் அல்லது அனுமதிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் நிறுத்திக்கொள்ள வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. இருசக்கர வாகனங்கள் பெரியார் சிலை சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு மற்றும் அக்னி தீர்த்தம் சந்திப்பை கடந்து மாடவீதிக்குள் செல்ல அனுமதி இல்லை.
மகாரதம்-30.11.2025
1.திண்டிவணம் சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள் டேனிஷ் மிஷன் பள்ளி மற்றும் ரயில்வே ஸ்டேசன் பார்கிங்கில் நிறுத்திவிட்டு செல்லலாம் அல்லது திருக்கோவிலூர் சாலை வழியாக சென்று காந்திநகர் பார்கிங்கில் நிறுத்தி விட்டு செல்லலாம்.
2.வேட்டவலம் சாலை மற்றும் திருக்கோவிலூர் சாலை வழியாக வரும் இருச்சக்கர வாகனங்கள் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, காந்தி நகர் பார்கிங் அல்லது திருவள்ளுவர் சிலை முதல் விஜயாமால் வரை உள்ள பார்கிங்கில் வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்லலாம்.
3.தண்டராம்பட்டு சாலை மற்றும் மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் இருச்சக்கர வாகனங்கள் சண்முக கல்லூரி அருகே அல்லது கால்நடை மருத்துவமனை அருகில் நிறுத்திவிட்டு செல்லலாம்.
4.செங்கம் சாலை வழியாக வரும் இருச்சக்கர வாகனங்கள் ராஜராஜன் தெரு ரமணமகரிஷி கண் மருத்துவமனை அல்லது வஉசி நகர் 11வது தெருவில் வானகத்தை நிறுத்திவிட்டு செல்லலாம்.
5. வேலூர் சாலை காஞ்சி சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலையில் இருந்து வரும் இருச்சக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம் வழியாக வந்து ரயில்வே ஸ்டேசன் முன்பு மற்றும் டேனிஷ் மிஷன் அல்லது காந்திநகர் பார்கிங்கில் நிறுத்திவிட்டு செல்லலாம்.
மகாதீபம்-02.12.2025 தேதி மதியம் 2 மணி முதல் 05.12.2025 தேதி காலை 10 மணி வரை:
1. திண்டிவணம் சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள் சௌந்தராஜன் ஆயில்மில், புதிய பேருந்து நிலையம் முன்பு, டேனிஷ் மிஷன் பள்ளி மற்றும் ரயில்வே ஸ்டேசன் பார்கிங்கில் நிறுத்திவிட்டு செல்லலாம்.
2. வேட்டவலம் சாலை மற்றும் திருக்கோவிலூர் சாலையின் வழியாக வரும் இருச்சக்கர வானங்கள் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி காந்திநகர் பாக்கிங் அல்லது திருவள்ளுவர் சிலை முதல் விஜயா மஹால் வரை உள்ள பாரக்கிங்கில் வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்லலாம்.
3.செங்கம் சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் விஜி திருமண மண்டபம் பின்புறம் அருணாசலா ஆசிரமம் அருகில் அல்லது ரமணா பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு செல்லலாம்.
4. அவலூர்பேட்டை சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் ரயில்வே கூட்ஸ் ஷெட், வல்லாள மகாராஜா கோவில் அருகில் அல்லது கிருஷ்ணமுர்த்தி காலி இடத்தில் பார்கிங் செய்து விட்டு செல்லலாம்.
5. வேலூர் சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் அண்ணா ஆர்சிக்கு முன்பு பூமாலை வணிக வளாகம், எஸ்ஜிடி பார்க்கிங் அல்லது நுகர்பொருள் பண்டக சாலை முன்பு நிறுத்திவிட்டு செல்லலாம்.






















