Tiruvannamalai: இன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்ந்த திருவண்ணாமலை - உற்சாகத்தில் மக்கள்
திருவண்ணாமலை இன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்வு பெற்றுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. இதில் திருவண்ணாமலை நகரம் சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பற்றிய குறிப்பு வருகின்றது. இதில் பல்லவர்கள் ஆட்சிக்கு முன்பாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் இராணிப்பேட்டை ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகரமாக விளங்கியது. பின்னர் திருவண்ணாமலை 1866-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பெற்றது. 1946-இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 1971-இல் முதல் நிலை நகராட்சியாக உருவானது.1998-இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2007-இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. திருவண்ணாமலை நகரத்தில் மட்டும் சுமார் 1.65 லட்சம் மக்கள் தொகை கொண்டது. திருவண்ணாமலை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கடந்தாண்டு அறிவித்தார்.
திருவண்ணாமலை மாநகராட்சியாக உயர்வு
இதையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதில் திருவண்ணாமலை நகராட்சியுடன் வேங்கிக்கால் உட்பட 16 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஊராட்சி மன்றம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்வு
இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, .திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலை, ஆடையூர், வேங்கிக்கால், நாச்சி பட்டு, மேலதிகான், நல்லவன் பாளையம், ஆணை பிறந்தான், ஏந்தல், சாவல் பூண்டி, வெங்காய வேலூர், இனம் காரியங்கள், அத்தியந்தல் போன்ற பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அம்மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.