மேலும் அறிய

ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி சுவற்றை துலையிட்டு வெளியே வந்து தொங்கும் நிலையில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்படும் நிலை உள்ளதால் வட்டாட்சியர் உடனடியாக ஆலமரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் 1898 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1989-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டதால் மீண்டும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி துளையிட்டு தரையில் ஊன்றும் அவல நிலை நீடித்து வருகிறது.

ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அதோடு மட்டுமில்லாமல் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால்  இதன் மேல் ஆலமரம் வளர்ந்து ஆலமரத்தின் வேர்கள் கட்டிடத்தில் பல இடங்களில் படர்ந்து கட்டிடத்தின் உள்பகுதியிலும், வெளிப்பக்கத்திலும் வேரூன்றி இருப்பதால் கட்டிடம் சிதலம் ஏற்பட்டு நிலை உள்ளது.  திமுக ஆட்சியில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் எ.வ.வேலு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவையில்லாத கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் சொந்த தொகுதியில் உள்ள திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பழமையான நிலையில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடமும், அரசு அலுவலர்களிடமும், பொது மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் வினித்குமாரிடம் பேசுகையில்:

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகமாக உள்ள கட்டிடம் பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் சிறைச்சாலை , குழந்தைகள் நீதிமன்றம் போன்ற அரசின்  முக்கிய அலுவலகமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடத்தில் சரியான பராமரிப்பு செய்யாததால் இந்த பழங்கால கட்டிடத்தில் ஆலமரம் வேரூன்றி அதனுடைய விழுதுகள் கட்டிடத்தின் கீழே வரையில் பரவி உள்ளது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை போய்விடும், தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் 20 வருடங்கள் மட்டுமே உறுதியாக உள்ளது.அதன்பிறகு கட்டிடத்தின் உறுதிதன்மை இல்லாமல் சிதிலமடைந்து விடுகிறது. இதனால் மிகவும் பழமையான கட்டிடமாக  பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது வரையில் உறுதியோடு உள்ளது. அதன் உறுதி இல்லாமல் ஆவதற்கு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget