மேலும் அறிய

பெண் குழந்தைகள் மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. வழிமுறைகள் என்ன.? 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18-வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூபாய் 100000 மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024-2025-ஆம் ஆண்டிற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதிகள்:

13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பர்-ன் படி) கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் வேறு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல் வேறு வகையில் எதிரான சமூக அவலங்கள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.

விருது:

மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும்.

விருதிற்கான முன்மொழிவுகள் :

மேற்காணும் விருதினைப் பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம்.

பரிந்துரைக்கான காலம் :

உரிய பரிந்துரைகள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2-வது தளம் வேங்கிக்கால் திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்Thirumavalavan Meet Buddhist : தேம்பி அழுத புத்த பிட்சு..கண்ணீரை துடைத்த திருமா”தைரியமா இருங்க ஐயா”Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
Breaking News LIVE 19 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

"பாலியல் புகார் சிக்கல்” பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது..!
“I AM WAITING”  திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?

Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!

Embed widget