திருவண்ணாமலை: மேல்மாவில் சிப்காட்டு விரிவாக்கத்தை கைவிடக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தோட்டக்கலைத் துறையில் மா, பலா, வாழை போன்ற பழச்செடிகள் வழங்க வேண்டும், சிறுகுறு விவசாயிகளுக்கு 10 எச்.பி. டிராக்டர் வழங்கிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைப்பெற்றது.
விவசாயி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா பகுதியில் சிப்காட்டு விரிவாக்கத்தை கைவிட கோரி 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தனியார் மருந்து கடைகளில் விற்கப்படும் விதை சரியாக முளைப்பு திறன் இல்லை அதனை வேளாண்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து விதை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வந்தவாசி பகுதியில் உரம் பற்றாக்குறை உள்ளதாகவும், தெரிவித்தார். மேலும் பண்ணாரி கரும்பு சர்க்கரை அலையில் பதிவு செய்த கரும்புகளுக்கு 2915 ரூபாயும் பதிவு செய்யாத கரும்புகளுக்கு 3500 ரூபாய் தருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார். ஆவின் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் மாட்டு தீவனதில் கலப்படம் உள்ளதாகவும் , அதிக விலைக்கு விற்பதால் விவாய்கள் வாங்கமுடியாமல் வேதனை அடைவதாகவும், அதேபோன்று வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லிற்கு 78 கிலோ எடை வைக்கின்றனர் ஆனல் அதற்கு 75 கிலோதான் வைக்கவேண்டும் இவர்கள் அதிகமாக வைத்து விவாய்களிடம் இருந்து கொள்ளை அடிக்கின்றனர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் 1 இலட்சத்து 57 ஆயிரத்து 288 எக்டரிலும், சிறுதானியங்கள் 11 ஆயிரத்து 722 எக்டரிலும், பயறுவகைகள் 36 ஆயிரத்து 672 எக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 60 ஆயிரத்து 558 ஏக்டரிலும், கரும்பு 14 ஆயிரத்து 345 எக்டரிலும் பருத்தி 74 எக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது என்ற விபரம் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் கிடங்குகளில் நெல் 45.59 மெ.டன், சிறுதானியம் 24.31 மெ.டன், பயிறுவகைகள் 11.68 மெ.டன் எண்ணெய்வித்து 42.35 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவையான உரங்கள் உள்ளது எனவும் இன்று (நேற்று) 600 மெ.டன் யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வரப்பெற்றுள்ளது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள்
தானிப்படி பகுதியை சுற்றிலும் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இவர்கள் அனைவரும் தானிப்படி அரசு மருத்துவ மனைக்குத்தான் செல்கின்றனர்,ஆனல் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என குற்றம் சாட்டினார். செல்லங்குப்பம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் எனவும், தலித் மக்களுக்கு தடையில்லா பட்ட சான்றிதழ் வழங்க வேண்டும், வந்தவாசி கீழ் சதமங்கலத்தில் உள்ள ஆக்கரமிப்புகளை அக்கற்ற வேண்டும் ,கண்டியாங்குப்பம் ஏரியில் பொது நபர்கள் ஆக்கரமித்து வைத்துள்ளார் அதனை அகற்ற வேண்டும்,கோட்டம்பட்டியில் 100 நாள் வேளையில் முறைகேடு நடைபெற்று வருகிறது. அதற்கு நடவடிக்கை வேண்டும், என பேசினார்.
மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவும், பி.எம்.கிசான் நிதி உதவி தகுதியான விவசாயிகளுக்கு பெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு, யூடிஆர் திருத்தம் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் வழங்கவும், சொட்டுநீர் பாசனம் அமைத்துத் தர வேண்டும் மாட்டுக் கொட்டகை அமைத்துத் தர வேண்டும், நாராயணக்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியை புதியதாக கட்டிதர வேண்டும், தோட்டக்கலைத் துறையில் மா, பலா, வாழை போன்ற பழச்செடிகள் வழங்க வேண்டும், சிறுகுறு விவசாயிகளுக்கு 10 எச்.பி. டிராக்டர் வழங்கிட வேண்டும், நரசிங்கபுரம் கிராமத்தில் பாம்புக்கடி விஷக்கடி மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைத்திட வேண்டும் கண்ணமங்கலம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றிட வேண்டும் ஆனைவாடி கிராமத்தில் உள்ள சீமைக்கரவேல மரங்களை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் விரைவில் தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சி.ஹரகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முனைவர், க.உமாபதி, இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் நடராஜன் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.