திருவண்ணாமலை மாநகராட்சியாக அறிவிப்பு - அந்த ஊர் மக்கள் சொல்வது என்ன?
திருவண்ணாமலை நகராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை , இவைகள் அனைத்தும் செய்து முடித்த பிறகு மாநகராட்சியாக அறிவித்து இருக்கலாம் - வியாபாரிகள்
1911 ஆம் ஆண்டு மாவட்ட எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலை வட ஆற்காடு மாவட்டத்தில் மாற்றப்பட்டது. வட ஆற்காடு மாவட்டத்தில் மூன்று வருவாய் கோட்டங்கள் இருந்தன. அவை வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலையாகும். 1959 ஆம் ஆண்டு செய்யாறு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மேலூரை தலைமையிடமாக கொண்டு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் வருவாயென 1997ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் இருந்த மாவட்டத்தின் பெயரில் ஊரின் பெயரைக் கொண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் தலைமை மாவட்டம் என ஆனது. அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கம் வட்டத்தில் இருந்து, தண்டராம்பட்டு வட்டம் 2007ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்களும் 3 வருவாய் கோட்டங்கள்
அதன்பிறகு 2015இல் போளூர் வட்டத்தில் இருந்து கலசபாக்கம் தனியாக பிரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆரணி வந்தவாசி வட்டங்களில் உள்ள கிராமங்களை ஒன்றிணைந்து சேத்துப்பட்டு வட்டம் உருவானது. ஏற்கனவே 1860 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு வட்டத் தலைநகர் என்ற சிறப்பை இழந்தது. அது மீண்டும் அதே வருடம் செய்யாறு வட்டத்தில் உள்ள வெம்பாக்கம் ஒன்றிய பகுதியை பிரித்து வெட்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் பிரிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை இரண்டாக பிரித்து கீழ்பெண்ணாத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு செங்கம், போளூர், கலசபக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள மலை கிராமங்களை உள்ளடக்கிய ஜமுனமரத்தூர் ஊரை தலைமையிடமாக கொண்டு சட்டத்தை உருவாக்கியது. மேலும் திருவண்ணாமலை செய்யாறு வருவாய் கோட்டங்கள் பிரித்து ஜமுனமரத்தூர், ஆரணி, போளூர், கலசபாக்கம் வட்டங்களை உள்ளடக்கி தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்களும் 3 வருவாய் கோட்டங்கள் உடன் செயல்பட்டு வருகின்றது.
வியாபாரிகள் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டும் என கோரிக்கை
இந்த நிலையில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்துள்ளார். தற்போது திருவண்ணாமலை நகராட்சியும் மாநகராட்சியாக அறிவித்துள்ளதால் இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி மக்களிடமும், தொழிலாளர்களிடமும் கேட்கையில், ”திருவண்ணாமலை நகராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை, நகராட்சிக்கு போதிய வருமானமும் இல்லை, அண்ணாமலையார் கோவில் மட்டுமே மூலாதாரமாக வைத்து திருவண்ணாமலையில் வியாபாரிகளின் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
அதிக அளவில் தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் மட்டுமே உள்ளது. தொழில் சார்ந்த எந்தவொரு வேலை வாய்ப்புகள் இல்லை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இதனால் கோவில் சுற்றிலும் உள்ள மாடவீதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பாதாளசாக்கடை வசதிகள் இல்லை, திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எடுக்கப்பட்ட கிராமங்கள் அனைத்தும் இதுவரையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை, தற்போது மாநகராட்சியால் திருவண்ணாமலையில் சொத்து வரி , குப்பை வரி, குடிதண்ணீர் வரி, கடையின் வாடகை ஆகியவை உயர்த்தப்படும். இதனால் வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி வார்டுகளில் சாலைவசதி , தண்ணீர் வசதி , கால்வாய் வசதி ஆகியவை எதுவும் செய்யப்படவில்லை, இவைகள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு மாநகராட்சியாக அறிவித்து இருந்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.