மேலும் அறிய

நாளை மறுநாள் மறக்காதீர்கள்... குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுக்குறாங்க

தேசிய குடற்புழு நீக்க நாள் அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 732172 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 287998 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

தேசிய குடற்புழு நீக்க நாள் 23.08.2024 (வெள்ளிக்கிழமை) 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு 30.08.2024 அன்று வழங்கப்பட உள்ளது. இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 அப கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும்  2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 அப கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரை வழங்கப்படும். இம்முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இக்குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 732172 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 287998 பெண்களுக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) வழங்கப்படவுள்ளது. புழுத்தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஊட்டச்சத்து குறைபாடு சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு

குடற்புழு பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்:

திறந்த வெளியில் மலம் கழித்தல் கூடாது கழிவறைகளை பயன்படுத்துதல், காலணிகளை அணிதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், உணவுக்கு முன், கழிவறையினை பயன்படுத்திய பின் சோப்பு போட்டு கைகளை கழுவுதல், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருத்தல்

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

இரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. இதில் பொது சுகாதாரத்துறை பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சமூக நலத்துறை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளனர். மேலும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு பயனடையுமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் - பெரியார் சிலை முன்பு உறுதியேற்பு
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் - பெரியார் சிலை முன்பு உறுதியேற்பு
One Nation One Election: ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
One Nation One Election: ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?
NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?
Embed widget