மேலும் அறிய

திருவண்ணாமலையில் கிரிவலத்துக்காக வெளிநாட்டவர்களை தங்க வைப்பவர்களின் கவனத்துக்கு! எச்சரிக்கும் எஸ்.பி!

திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம் தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வெளிநாடு ,வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில்  திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆன்மீகத்தை நாடி வருகின்றனர்.

இவர்களுக்கு ஏற்கெனவே முறையாக அனுமதி பெற்ற C-FORM பயனாளர் அடையாள எண் உடைய ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள் தங்குவதற்கு இடமளித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாட்டினர் பலருக்கு வீடுகளிலோ, தங்கும் விடுதிகளிலோ அல்லது அகதிகள் முகாம்களிலோ காவல்துறையிடம் எவ்வித தகவலும், அனுமதியும் இல்லாமல் மாவட்டத்தில் உள்ளவர்கள் வாடகைக்கு விடுவதாக புகார்கள் வருகின்றன.

குறிப்பாக திருவண்ணாமலை நகர பகுதி மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள வீடு மற்றும் விடுதி உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகளில் அனுமதி பெறாமலும், போதிய பாதுகாப்பின்றியும் வெளிநாட்டவரை தங்கவைத்து வருகின்றனர்.

வெளிநாட்டவர்களை தங்கவைப்பவர்கள் C-FORM தகவல் அளிக்க வேண்டும் 

இதனால் வெளிநாட்டவர் எங்கே தங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல் தெரியாமல் போவதால் அவர்களின் விசா நீடிப்பு, விசா மாற்றம், இதர சேவையை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்களை தங்குவதற்கு அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் அந்த நபர் குறித்த அடிப்படை விரவங்களை ஆன்லைன் மூலம் C-FORM-ஆக பதிவுசெய்ய வேண்டும். C-FORM தகவல் இல்லாமலோ அல்லது வேறு முகவரியில் எடுத்த C-FORM வைத்தோ வெளிநாட்டவர்களுக்கு தங்க இடமளித்தால், சம்பந்தப்பட்ட தங்குமிடத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விடுதி உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை

எனவே, வெளிநாட்டவரை தங்களது வீடு. தங்கும் விடுதி, ஆசிரமம். மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்க்காக பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண் மற்றும் அதற்க்கான வழிமுறைகள் திருவண்ணாமலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget